தமிழ்நாடு

அரசு மருத்துவமனை முன் ஆட்டோக்கள் அணிவகுப்பு; பஸ் பயணிகள், நோயாளிகள், பாதசாரிகள் பரிதவிப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வாசலருகே ஆட்டோ, ேஷர் ஆட்டோக்கள் இரண்டு மூன்று வரிசைகளில் ரோட்டை அடைத்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்கள் மருத்துவமனைக்குள் செல்கின்றன. மருத்துவமனையை விட்டு வெளியேறும் நோயாளிகள் உறவினர்களை குறிவைத்து மூன்று வாசல் பகுதிகளையும்
 அரசு மருத்துவமனை முன் ஆட்டோக்கள் அணிவகுப்பு; பஸ் பயணிகள், நோயாளிகள், பாதசாரிகள் பரிதவிப்பு

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வாசலருகே ஆட்டோ, ேஷர் ஆட்டோக்கள் இரண்டு மூன்று வரிசைகளில் ரோட்டை அடைத்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்கள் மருத்துவமனைக்குள் செல்கின்றன. மருத்துவமனையை விட்டு வெளியேறும் நோயாளிகள் உறவினர்களை குறிவைத்து மூன்று வாசல் பகுதிகளையும் ஆக்கிரமித்தபடி ஆட்டோக்காரர்கள் நிற்கின்றனர். சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு வரிசைகளில் நிறுத்தும் போது பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் கலெக்டர் அலுவலகம் வரை போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நின்று பஸ் ஏற முடியாத வகையில் இடைஞ்சலாக உள்ளதால், பஸ்களை தள்ளி டிரைவர்கள் நிறுத்துகின்றனர். பயணிகள் ஓடிச் சென்று பஸ் ஏற முடியாமல் தவிக்கின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தாலும் சட்டென்று கடந்து செல்ல முடியவில்லை.இந்த பகுதியில் போலீசார் நிற்பதில்லை. சிக்னல் விழுந்து வாகனங்கள் மருத்துவமனை பகுதியை கடந்து செல்வது மிகப்பெரிய சாகசமாக உள்ளது.

பாதசாரிகள் வாகனங்களுக்குள் புகுந்து செல்ல வேண்டியுள்ளது. மருத்துவமனை பகுதி என்பதால் போலீசாரை நிரந்தரமாக இப்பகுதியில் நிறுத்தி ஆட்டோ உட்பட போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து துணைகமிஷனர் ஈஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X