பொது செய்தி

தமிழ்நாடு

கெட்டு போன பால் வெண்ணெய் ஆனது; ஆவின் நஷ்டம் ரூ.3 லட்சமாக குறைந்தது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் கெட்டுப் போனதாக சர்ச்சையான ஆவின் பால் உரிய நேரத்தில் வெண்ணெயாக மாற்றப்பட்டதால் நஷ்டம் ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டது.ஆக.,2ல் 'கவ் மில்க்' பாக்கெட்டுகளில் போதிய குளிரூட்டல் இல்லாததால் 20 ஆயிரம் லிட்., அளவில் கால், அரை லிட்., பாக்கெட்டுகள் கெட்டுப் போனது. பணியில் கவனக்குறைவாக இருந்த தரக்கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் இரு பெண் அதிகாரிகளை பொது

மதுரை : மதுரையில் கெட்டுப் போனதாக சர்ச்சையான ஆவின் பால் உரிய நேரத்தில் வெண்ணெயாக மாற்றப்பட்டதால் நஷ்டம் ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டது.

ஆக.,2ல் 'கவ் மில்க்' பாக்கெட்டுகளில் போதிய குளிரூட்டல் இல்லாததால் 20 ஆயிரம் லிட்., அளவில் கால், அரை லிட்., பாக்கெட்டுகள் கெட்டுப் போனது. பணியில் கவனக்குறைவாக இருந்த தரக்கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப பிரிவின் இரு பெண் அதிகாரிகளை பொது மேலாளர் கருணாகரன் 'சஸ்பெண்ட்' செய்தார்.

பண்ணை பிரிவு துணை பொது மேலாளர் சாரதா தலைமையிலான குழு விசாரிக்கவும் உத்தரவிட்டார்.பொது மேலாளர் கருணாகரன் கூறுகையில் “சம்மந்தப்பட்ட நாளில் 20,460 லிட்., பால் பாக்கெட்டுகள் தரம் குறைந்த தகவல் அறிந்து வெண்ணெயாக மாற்றம் செய்ய உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.3 லட்சம் அளவிலேயே நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விசாரணை குழு இன்று (ஆக.,23) அறிக்கை தாக்கல் செய்யும்” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X