சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிசி ஆலை உரிமையாளர் மகன் கடத்தல்: ரூ.3 கோடி கொடுத்து மீட்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் அருகே பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்ட நிலையில் கடத்தல்காரர்களுக்கு ரூ.3 கோடி கொடுத்து மீட்ட சம்பவம் தொடர்பாக காங்கேயம் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.காங்கேயம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரிசி ஆலை நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபரின், 23 வயது மகன். இவர் நேற்று மதியம் காங்கேயம் வீரசோழபுரத்துக்கு காரில் சென்றார். இவரது காரை,

திருப்பூர்: திருப்பூர் அருகே பிரபல அரிசி ஆலை உரிமையாளரின் மகன் கடத்தப்பட்ட நிலையில் கடத்தல்காரர்களுக்கு ரூ.3 கோடி கொடுத்து மீட்ட சம்பவம் தொடர்பாக காங்கேயம் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காங்கேயம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரிசி ஆலை நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபரின், 23 வயது மகன். இவர் நேற்று மதியம் காங்கேயம் வீரசோழபுரத்துக்கு காரில் சென்றார். இவரது காரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. மகன் மற்றும் டிரைவர் ஆகியோரை மர்ம கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.
இதையடுத்து, மதுரை அருகே இருந்த மகனை, 3 கோடி ரூபாய் கொடுத்து, மர்ம கும்பலிடம் இருந்து நேற்று இரவு தொழிலதிபர் மீட்டார். கடத்தல் விவகாரம் தொடர்பாக காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர். தொழிலதிபரின் மகன் கடத்தப்பட்ட சம்பவத்தில் யார்? யாருக்கு தொடர்பு? ரூ.3 கோடி கொடுத்தது எப்படி? என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X