பொது செய்தி

இந்தியா

கோவிட் 3வது அலை அக்டோபரில் உச்சம்: தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'கோவிட் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்' என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) எச்சரித்துள்ளது.உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கோவிட் பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. நம் நாட்டில் கோவிட் முதல் அலை கடந்தாண்டு மார்ச்சில் துவங்கி, அக்., வரை இருந்தது; அதன்பின் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால், கோவிட் தடுப்பு

புதுடில்லி: 'கோவிட் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்' என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) எச்சரித்துள்ளது.

உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கோவிட் பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. நம் நாட்டில் கோவிட் முதல் அலை கடந்தாண்டு மார்ச்சில் துவங்கி, அக்., வரை இருந்தது; அதன்பின் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால், கோவிட் தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக, இந்தாண்டு மார்ச்சில் 2வது அலை பரவத் துவங்கியது. ஏப்., மற்றும் மே மாதம் வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. அதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.



latest tamil news



கோவிட் தொற்று குறைந்தாலும் இந்தியாவில், 'கோவிட் 3வது அலை பரவும் அபாயம் உள்ளது' என, டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக, 'கோவிட் 3வது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ.,) கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்.,) பிரதமர் அலுவலகத்திற்கு (பி.எம்.ஓ.,) சமீபத்தில் அளித்த அறிக்கையில், 'கோவிட் -பெருந்தொற்றின் 3வது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையலாம்' எனத் தெரிவித்துள்ளது.




latest tamil news




அலட்சியம் வேண்டாம்!


'முதல் அலையின் பரவல் குறைந்ததும், இனி பாதிப்பு இல்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது. கோவிட் தடுப்பில் மக்கள் காட்டிய அலட்சியம் தான், 2வது அலைக்கு வழிவகுத்தது. அதே தவறுகளை மக்கள் மீண்டும் செய்யத் துவங்கியுள்ளனர். முக கவசம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட தடுப்பு நடைமுறைகளை மக்கள் இன்னும் குறைந்தது ஓராண்டுக்காவது முழுமையாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் 3வது அலை பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்' என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-ஆக-202116:11:19 IST Report Abuse
Vijay D Ratnam டாஸ்மாக் வருமானம் என்பது நிதிநிலையில் தள்ளாடிக்கொண்டு இருக்கும் அரசுக்கு மிகவும் அவசியம். அதனால் அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த நேரத்தில் சினிமா தியேட்டர்களை திறந்துவிடுவது முழு முட்டாள்தனம். தொற்று பரவி பல்கி பெறுக வழிவகுக்கும்.3 வது அலை ஆக்டொபரில் இருக்கும் என்கிறார்கள். அதன் பிறகு சினிமாவை பார்த்துக்கொள்ளலாமே. சினிமா தியேட்டர் நோயை பரப்புவதற்கு சூப்பரான இடம் என்பதை இவிங்களுக்கு எடுத்து சொல்லுங்கப்பா.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-ஆக-202113:49:11 IST Report Abuse
Visu Iyer சரி... கொரானா நூறாவது அலை வரும்னு தான் காத்துகிட்டு இருக்கிறேன்... என்று சொல்ல போறாங்க... சினிமா நூறு நாள் ஓடுவது போல இதை வைத்தே மீதம் உள்ள ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு.. அடுத்த தேர்தலில்.. வெற்றி பெறலாம் என்றால்... எப்படி இருக்கும்...?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஆக-202112:46:10 IST Report Abuse
Ramesh Sargam ஆராய்ச்சியாளர்கள் கூறவே தேவை இல்லை. ஏன் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் அடையும் என்றால், ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் வரை, பண்டிகைகள் அதிகம். குறிப்பாக ஹிந்துக்களின் பண்டிகைகள். ஆகையால், மக்கள் வெளியில் வந்து பொருட்களை வாங்க அதிகம் வருவார்கள். சொல்பெச்சு கேட்க மாட்டார்கள். அப்படி மக்கள் அதிகம் வெளியில் வருவதால், வைரஸ் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. பிறகு என்ன - மூன்றாவது அலைதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X