பொது செய்தி

தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை : 'பத்து மாவட்டங்களில் இன்றும், ஒன்பது மாவட்டங்களில் நாளையும், கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலுார், விழுப்புரம்,

சென்னை : 'பத்து மாவட்டங்களில் இன்றும், ஒன்பது மாவட்டங்களில் நாளையும், கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை மிதமான மழை பெய்யும்.

நாளை மறுநாள் முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று முன்தினம் காலையில், சென்னையில் திடீரென பெய்த மழை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில், 7 செ.மீ., பதிவாகியுள்ளது.

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், நாளை வரை பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X