அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொன்விழா நாயகன் துரைமுருகன்: ஸ்டாலின் பாராட்டில் கண்கலங்கிய துரைமுருகன்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: சட்டசபையில் இன்று (ஆக.,23) நீர்வளத்துறை தொடர்பான விவாத்திற்கு முன்னர் அத்துறை அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். நெகிழ்ச்சியடைந்த துரைமுருகன், கண்கலங்கினார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, நீர்வளத்துறை சார்ந்த மானிய கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, 50 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக
TNAssembly, Stalin, DuraiMurugan, Tamilnadu, DMK, CM, MKStalin, Golden Jublee Hero, திமுக, முதல்வர், ஸ்டாலின், அமைச்சர், துரைமுருகன், தமிழகம், தமிழ்நாடு, சட்டசபை, பொன்விழா நாயகன், கண்ணீர், புகழாரம்,

சென்னை: சட்டசபையில் இன்று (ஆக.,23) நீர்வளத்துறை தொடர்பான விவாத்திற்கு முன்னர் அத்துறை அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். நெகிழ்ச்சியடைந்த துரைமுருகன், கண்கலங்கினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, நீர்வளத்துறை சார்ந்த மானிய கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, 50 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக செயலாற்றி பொன்விழா காணும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கட்சிக்கும், ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர் துரைமுருகன். சட்டசபையில் கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைப்பார், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைப்பவர். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் மனதில் பட்டத்தை உறுதியுடன் சொல்லக்கூடியவர்.


latest tamil news


கருணாநிதி, அன்பழகன் இழப்புக்குப் பிறகு அவர்களது இடத்தில் துரைமுருகனை வைத்துப் பார்க்கிறேன். கருணாநிதியின் அருகில் மட்டுமல்ல, அவரது மனதிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்திருப்பவர் துரைமுருகன். துரைமுருகனுடன் கருணாநிதி பேசிக் கொண்டே இருப்பதைப் பார்க்க பொறாமையாக இருக்கும். எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர். சட்டசபையின் 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் எம்எல்ஏ.,வாக இருந்து பொன் விழா நாயகனாக இருக்கிறார் துரைமுருகன். சபை முன்னவராக இருந்து வழிகாட்டி வருகிறார். அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தவர். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


ஸ்டாலின் பேசும்போது துரைமுருகன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்கினார். பின்னர் பேசிய துரைமுருகன், "முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிக் கடன் பட்டவனாக வாழ்நாள் முழுவதும் இருப்பேன். இவ்வளவு பற்றும், பாசமும் முதல்வர் என் மீது வைத்திருப்பார் என நினைக்கவில்லை," என்றார்.

பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன் பேசுகையில், '‛விஸ்வாசத்திற்கு சொந்தக்காரர் துரைமுருகன். எதிர்க்கட்சியாக இருந்த போதும் உரிமையோடு பழகுபவர். சுவாசம் நின்று போனாலும் விஸ்வாசம் விட்டுப் போகக்கூடாது என்ற கருத்துக்கு உதாரணமாக இருப்பவர் துரைமுருகன்,'' எனப் புகழ்ந்து பேசினார்.

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: ‛‛அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர்,'' எனப் பாராட்டினார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தலைவரை விசுவாசிக்கின்ற தலைவர்கள் அரசியலில் அமைவது கடினம்; அப்படிப்பட்டவர் முதல்வருக்கு கிடைத்து இருக்கிறார்.
வி.சி.க எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன்: 50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன். தமிழகத்திற்கு தன்னம்பிக்கை தரும் இயக்கமாகவும் தி.மு.க., இருக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றி, வீழ்ச்சிகளிலும் பயணித்தவர்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-202106:54:19 IST Report Abuse
அப்புசாமி பறிகுடுத்த பாஞ்சி கோடியை திருப்பிட்டாப்போல. அதான் கோபம் போய் பாசம் வந்திருச்சு.
Rate this:
Cancel
24-ஆக-202104:42:02 IST Report Abuse
ராஜா சட்ட மன்றத்தில் நுழைந்த முதல் பெண்ணின் ஆடைகளை பிடித்து இழுத்து அவமானம் செய்த துச்சாதனன் தான் இவர். 50 வருடங்கள் அல்ல 500 வருடங்கள் ஆனாலும் அந்த களங்கம் போகாது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஆக-202103:17:22 IST Report Abuse
meenakshisundaram ஜே வை சட்ட சபையில் மான பங்கப்படுத்திய துரை முக வால் புகழப்பட்டது போல பையன் ஸ்டாலின் புகழ்கிறார் .சட்டசபையி இதை போன்றவர்கள் இருப்பது மானக்கேடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X