கோவிட் பாதிப்பு; ஐ.நா., பொது கூட்டத்துக்கு நேரில் வர வேண்டாம்: உறுப்பு நாடுகளுக்கு கடிதம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்த ஆண்டுக்கான ஐ.நா., பொது சபைக் கூட்டம், அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துகொண்டு வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி உரையாற்றுவார் என, ஐ.நா., வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கோவிட் தொற்று நிலவரத்தைப் பொருத்தே பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும் எனவும்

வாஷிங்டன்: இந்த ஆண்டுக்கான ஐ.நா., பொது சபைக் கூட்டம், அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துகொண்டு வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதி உரையாற்றுவார் என, ஐ.நா., வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கோவிட் தொற்று நிலவரத்தைப் பொருத்தே பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.



latest tamil news



இந்நிலையில், ஐ.நா., பொது சபையின் 193 உறுப்பு நாடுகளுக்கு, ஐ.நா.,வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்பீல்டு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: ஐ.நா., பொதுச் சபைத் தலைமையகம் அமைந்துள்ள நாடு என்கிற முறையில், அந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்காவின் கடமையாகும். மேலும், ஐ.நா., தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க்கில் வசிக்கும் மக்களையும் கோவிட் பெருந்தொற்றிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பும் எங்களுக்குள்ளது.


latest tamil news



அந்த வகையில், ஐ.நா.,வின் 76வது ஆண்டுப் பொதுக் கூட்டம் கோவிட் தொற்றைப் பரப்பும் நிகழ்ச்சியாக ஆகிவிடக் கூடாது. எனவே, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்த்து, பதிவு செய்யப்பட்ட தங்களது வீடியோ உரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-202119:58:35 IST Report Abuse
அப்புசாமி அடடே... சொகுசு விமானம் பயன்படாம போய்க்கிட்டிருக்கே...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஆக-202112:35:47 IST Report Abuse
Ramesh Sargam லிண்டா தாமஸ்-கிரீன்பீல்டு கூறுவதும் சரிதான். முதலில் மக்களின் மற்றும் கலந்து கொள்ளும் மற்ற நாட்டு தலைவர்களின் நலம். பிறகு மற்றவை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஆக-202112:09:48 IST Report Abuse
தமிழவேல் தெரிந்ததுதானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X