வங்கிகள் மூலம் சம்பளம் பட்டுவாடா : பேரூராட்சி பணியாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் மூலம் சம்பளம் பட்டுவாடா : பேரூராட்சி பணியாளர்கள் வலியுறுத்தல்

Added : ஆக 23, 2021
Share
மதுரை : ''பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கூலி துாய்மை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் சம்பளத்தை உயர்த்தி வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்,'' என, பேரூராட்சி பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரையில் சங்க மாநில தலைவர் பிச்சைமுத்து கூறியதாவது: மாநிலத்தில் மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் பல்வேறு பேரூராட்சிகள்

மதுரை : ''பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கூலி துாய்மை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் சம்பளத்தை உயர்த்தி வங்கிகள் மூலம் வழங்க வேண்டும்,'' என, பேரூராட்சி பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் சங்க மாநில தலைவர் பிச்சைமுத்து கூறியதாவது:
மாநிலத்தில் மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் பல்வேறு பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் தற்போது பேரூராட்சிகளின் எண்ணிக்கை 521 ஆக குறைந்துள்ளது. ஆனால் கிராம ஊராட்சிகள் பல வளர்ச்சி பெற்றுள்ளன. எனவே தகுதியான கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக அரசு தரம் உயர்த்த வேண்டும். மேலும் பேரூராட்சிகளில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கணினி பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.துாய்மை பணியாளர்களுக்கு இலவச பட்டா வழங்கி தரமான வீடுகளையும் கட்டித்தர வேண்டும்.
துாய்மை இந்தியா திட்டத்தில் ஐந்தாண்டுகளாக பணிபுரிந்த 1500 பரப்புரையாளர்களை மீண்டும் பரப்புரையாளர்களாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பேரூராட்சிகளிலுள்ள செயல் திறன் வாய்ந்த தெருவிளக்கு மின் பணியாளர், குடிநீர் பொறியியல் பிரிவு பணியாளர்களை காலி ஓவர்சீயர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும். பேரூராட்சிகளின் நலன்களை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இக்கோரிக்கைகளை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட முடியும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X