கேரளாவில் குறைந்தது கொரோனா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி கொரோனா பரிசோதனை சரிந்ததால் நேற்று பாதிப்பும் வெகுவாக குறைந்தது.நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 63,406 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 10,402 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.41 ஆக இருந்தது. 25,586 பேர் குணமடைந்தனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 66 பேர் இறந்ததால் பலி 19,494 ஆக அதிகரித்தது. தற்போது 1,63,212 பேர்


மூணாறு : கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி கொரோனா பரிசோதனை சரிந்ததால் நேற்று பாதிப்பும் வெகுவாக குறைந்தது.

நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 63,406 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 10,402 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 16.41 ஆக இருந்தது. 25,586 பேர் குணமடைந்தனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 66 பேர் இறந்ததால் பலி 19,494 ஆக அதிகரித்தது. தற்போது 1,63,212 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும், 4,85,017 பேர் தனிமை கண்காணிப்பிலும் உள்ளனர்.மாவட்டம் வாரியாக மலப்புரம் 1577, கோழிகோடு 1376, பாலக்காடு 1133, எர்ணாகுளம் 1101, திருச்சூர் 1007, கண்ணூர் 778, கொல்லம் 766, ஆலப்புழா 644, திருவனந்தபுரம் 484, கோட்டயம் 415, பத்தனம்திட்டா 338, இடுக்கி 275, வயநாடு 265, காசர்கோடு 243 பேர் பாதிக்கப்பட்டனர்.மாநிலத்தில் ஓணம் விடுமுறைக்கு பின் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரதுறை கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X