சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவருக்கு 15 வயது சிறுமியுடன் டும்..டும் நிறுத்தம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, 57 வயது முதியவருக்கும், 15 வயது சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.வேலுார் மாவட்டம், வேலுார் பாகாயத்தைச் சேர்ந்தவர் கணபதி, 57. இவருக்கும் சலவன்பேட்டையைச் சேர்ந்த அவரது உறவுக்காரரின் 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய கடந்த மாதம் பேசி முடித்தனர். அதன்படி, சாத்து மதுரை அருகே உள்ள முருகன் கோவலில்

வேலுார்: வேலுார் அருகே, 57 வயது முதியவருக்கும், 15 வயது சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வேலுார் மாவட்டம், வேலுார் பாகாயத்தைச் சேர்ந்தவர் கணபதி, 57. இவருக்கும் சலவன்பேட்டையைச் சேர்ந்த அவரது உறவுக்காரரின் 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய கடந்த மாதம் பேசி முடித்தனர். அதன்படி, சாத்து மதுரை அருகே உள்ள முருகன் கோவலில் இன்று காலை 8:00 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது.
தகவல் அறிந்த வேலுார் சமூக நலத்துறையினர், வேலுார் தெற்கு போலீசார் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் இரு தரப்பிலும் உறுதி மொழி பத்திரத்தை அதிகாரிகள் எழுதி வாங்கினர். சிறுமியை மீட்டு வேலுார் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X