பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார்.அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு
மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் கோவில் கட்டும் கமிட்டியின் பொதுச்செயலரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத்ராய், இன்று (ஆக.,23) காலை சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் இல்லத்திற்கு வந்தார்.


latest tamil news



அங்கு பக்தர்கள் பேரவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரத்தினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை சம்பக்ராய், நினைவு பரிசாக வழங்கினார். அப்போது பக்தர்களிடம் சம்பத்ராய் பேசியதாவது:
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், ராமர்கோவில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. உலகளாவிய இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரும் 2023ம் ஆண்டு டிச., மாதம் ராமர்கோவில் கட்டுமானப்பணிகள் முடிந்து விடும். செங்கல், கம்பி இல்லாமல் கோவில் கட்டப்படுகிறது. செயற்கை பாறையில் துாண்கள் அமைத்து, 3 அடுக்குகளைக் கொண்டிருக்கும்.
வரும் 400 ஆண்டுகள் நிலைத்து நிற்கத்தக்க அளவில் சிறப்பு சிமெண்ட் பயன்படுத்தப்படும். கோவில் திறப்பு விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மாநில அமைப்பு செயலர் பி.எம்.நாகராஜன், வட மாநில அமைப்பு செயலர் ராமன், தமிழக அமைப்பு செயலர் வழக்கறிஞர் சீனிவாசன். முன்னாள் டி.ஜி.பி., பாலசந்தர், ஆண்டாள் பேரவை பொருளாளர் சரவணன், பேரவை துணைத் தலைவர்கள் கணேசன், நாகராஜன், சக்திவேல், பிச்சுமணி, திருகோவிந்தன், சாய்சிவா, துரைசாமி, அன்பு, நாராயணன், தில்லை வெங்கட்ராமன், சண்முகம் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

பக்தர்கள் அனைவருக்கும் கேரளா புகழ் பலாப்பழம் பாயாயசத்துடன் பல்வேறு பதார்த்தங்களுடன் கொண்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-202107:45:36 IST Report Abuse
Vittal anand rao. சீக்கிரம் கட்டி முடியுங்கள். ராமர் வெளியெ காத்திருக்கிறார்.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
24-ஆக-202103:10:43 IST Report Abuse
Venkatakrishnan வைர வைடூரியத்துலயே நீங்க ராமர் கோயில் கட்டுனாலும் நாட்டுல ஒன்னும் முன்னேறப் போவதில்லை அறிவு வளர்ச்சி இன்றி வரும் ஆன்மிக வளர்ச்சி நாட்டை பின்னோக்கிதான் கொண்டு போகும்... ஏற்கனவே அப்படிதான் போயிட்டு இருக்கு.. இன்னும் மக்கள் திருந்தவில்லை என்றால் நிலமை படு பாசம் ஆகிவிடும்
Rate this:
Cancel
23-ஆக-202122:55:50 IST Report Abuse
Vittal anand rao. சீக்கிரம். ராமர் காத்துக்கொண்டிருக்கிறAர் வீடு இல்லாமல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X