கல்யாண் சிங்கின் மறைவு பா.ஜ.,வுக்கு பேரிழப்பு: அமித்ஷா

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021
Share
Advertisement
லக்னோ: ‛‛உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மறைவு பா.ஜ.,வுக்கு பேரிழப்பு,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.உ.பி., முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்த கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று (ஆக.,22) லக்னோ சென்ற பிரதமர்
Union Home Minister, Amit Shah, Kalyan Singh, Last Respect, Union Ministers, Prahlad Patel, VK Singh, UP CM, Yogi Adityanath, MP CM, Shivraj Singh Chouhan, உள்துறை அமைச்சர், அமித்ஷா, கல்யாண் சிங், இழப்பு, இறுதி மரியாதை

லக்னோ: ‛‛உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மறைவு பா.ஜ.,வுக்கு பேரிழப்பு,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

உ.பி., முதல்வராகவும், ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்த கல்யாண் சிங், உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று (ஆக.,22) லக்னோ சென்ற பிரதமர் மோடி, கல்யாண் சிங்கின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். அவருடன் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல் மற்றும் வி.கே. சிங் சென்றனர்.


latest tamil news


அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அமித்ஷா பேசுகையில், ‛‛கல்யாண் சிங்கின் மறைவு பா.ஜ.,வுக்கு பேரிழப்பு. அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது கடினமாக இருக்கும். ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு அவர் தனது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறியதாகக் கூறினார்,'' எனப் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X