பெண்களின் துன்பம், வலியை பற்றி எப்போது பேசுவோம்?: பிரியங்கா கேள்வி

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, ‛‛பெண்களின் துன்பம் மற்றும் வலியை பற்றி எப்போது பேசுவோம்,'' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு முறை காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய்
Priyanka, LPG Cylinders, Price Rise, Priyanka Gandhi, Congress, பிரியங்கா, சிலிண்டர், விலை உயர்வு, பெண்கள், வலி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ்

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, ‛‛பெண்களின் துன்பம் மற்றும் வலியை பற்றி எப்போது பேசுவோம்,'' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

சா்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு முறை காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் காஸ் சிலிண்டர் விலை கடந்த 17-ம் தேதி மேலும் ரூ.25 உயர்ந்து, தற்போது ரூ.875க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே, கோவிட் தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் பெட்ரோல், டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியதுடன், காஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். சமையல் காஸ் சிலிண்டர் விலை குறித்து பெண் ஒருவர் பேசும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரியங்கா, அதில் பதிவிட்டதாவது: சமையல் காஸ் சிலிண்டர் விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. சிலிண்டரை நிரப்ப பணம் இல்லை. கோவிட் பொதுமுடக்கத்தால் வணிகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டு பெண்களின் துன்பம் மற்றும் அவர்களின் வலியைப் பற்றி எப்போது பேசுவோம்?. நாட்டில் பணவீக்கத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-ஆக-202112:15:58 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் புரிஞ்சுக்கினோம் இந்த வயசுல உங்களுக்கு சில பிரச்னைகள் வரலாம் அதுக்காக திறமையான லேடி டாக்டரைப் பார்ப்பது நல்லது இதுக்காக பிஜேபி என்ன செய்யும் ?
Rate this:
Cancel
24-ஆக-202108:58:50 IST Report Abuse
அருணா இத்தனை கருணை! ஆவேசம் ஊழலுக்கு முன் உங்கள் குடும்பத்தில் யாருக்கமே இல்லையே
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஆக-202106:19:39 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan விலை ஏற்றம் பெண்களை மட்டும்தான் பாதிக்கிறதா? குடும்பம் நடத்தும் ஆண்களையும்தான் பாதிக்கிறது. ஓட்டுப் பிச்சைக்காக அரசியல் தலைவர்கள் பெண்களைப் பற்றியே பேசுகிறார்கள். இந்தம்மா பேசுவது தவறு. அரசு கட்டுப் பாட்டில் உள்ளவைகள் விலை ஏறும்போது மட்டும் போராடும் இவர்கள் தனியார் பொருளை விலை ஏற்றும்போது பேசவதில்லை. அவர்கள் இந்தம்மாவை கவனிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X