சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் விபரீதம்: தன் வீட்டுக்கு தீ வைத்தவர் கைது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, குடி போதையில் தன் வீட்டுக்கே தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர், 40. கட்டட தொழிலாளி. இவர் மனைவி விஜயலட்சுமி, 38. இவர்களுக்கு தலா இரண்டு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.சங்கர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்றிரவு 8:00 மணிக்கு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, குடி போதையில் தன் வீட்டுக்கே தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கர், 40. கட்டட தொழிலாளி. இவர் மனைவி விஜயலட்சுமி, 38. இவர்களுக்கு தலா இரண்டு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.
சங்கர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்றிரவு 8:00 மணிக்கு குடித்து விட்டு வந்த சங்கர் பணம் கேட்டு மனைவி விஜயலட்சுமியை உருட்டுக் கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்படியும் போதை தெளியாத சங்கர் அவரது வீட்டிற்கே தீ வைத்தார். இதில், வீட்டில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. வாணியம்பாடி தீயணைக்கும் துறையினர் தீயை அணைத்தனர். அப்போது அவர்களிடமும், அங்கு வந்த மக்களிடமும் சங்கர் தகராறு செய்தார்.
அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகார்படி, வாணியம்பாடி போலீசார், சங்கரை இன்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X