பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுாரில் இருந்து திருப்பதி, திருமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து வெளி மாநிலத்திற்கு செல்லும் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டது. நான்கு மாதத்திற்கு பிறகு வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலம், சித்துார், திருப்பதி, திருமலை, கடப்பா, காளாஸ்திரி, குப்பம், விஜயவாடா, ஹைதராபாத், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கே.ஜி.எப்., கோலாருக்கும் பஸ்கள்
வேலூரில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கம்

வேலுார்: வேலுாரில் இருந்து திருப்பதி, திருமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து வெளி மாநிலத்திற்கு செல்லும் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டது. நான்கு மாதத்திற்கு பிறகு வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலம், சித்துார், திருப்பதி, திருமலை, கடப்பா, காளாஸ்திரி, குப்பம், விஜயவாடா, ஹைதராபாத், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கே.ஜி.எப்., கோலாருக்கும் பஸ்கள் இயங்கின.
வேலுார் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: வேலுாரில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு அரசு, தனியார், ஆந்திரா மாநில அரசு பஸ்கள் என 200 இயக்கப்பட்டன. இதில், திருமலை, திருப்பதிக்கு மட்டும் 100 ஆந்திரா அரசு பஸ்கள் இயங்கின. கர்நாடகா மாநிலத்திற்கு அரசு, கர்நாடகா மாநில அரசு பஸ்கள் 60 இயங்கின. ஒவ்வொரு பஸ்சிலும் 29 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆந்திரா, கர்நாடாகா மாநிலங்களில் இருந்து 300 பஸ்கள் வேலுார் வழியாக புதுச்சேரி, விழுப்புரம், சேலம், மதுரை, ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X