பொது செய்தி

தமிழ்நாடு

நான் ஆண்மையற்றவன்: சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா, தனது ஜாமின் மனுவில், ‛தான் ஆண்மையற்றவன்' எனக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி
சிவசங்கர் பாபா, ஆண்மையற்றவன், சிபிசிஐடி, வாக்குமூலம்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா, தனது ஜாமின் மனுவில், ‛தான் ஆண்மையற்றவன்' எனக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் டில்லியில் கைது செய்தனர்.


latest tamil news


தனக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என சிவசங்கர் பாபா கோரியிருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்காமல் இரண்டு மனுக்களையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. முன்னதாக முதல் போக்சோ வழக்கிலும் பாபாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்நிலையில், ‛தனக்கு ஆண்மை இல்லை' என்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையில் ஆண்மை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


இதுதொடர்பான அவரது ஜாமின் மனுவில், தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அதனால் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில், மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? என்று ஜாமின் மனு மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-ஆக-202110:03:18 IST Report Abuse
Matt P ஆண்மை இருக்கோ இல்லியோ சட்டத்துக்கு புறம்பாக கலாச்சாரத்துக்கு புறம்பாக ஒழுக்கத்துக்கு மாறாக நம்பிக்கை துரோகமாக தவறு செய்பவர்கள் யாரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
26-ஆக-202115:42:13 IST Report Abuse
Krishnan G எனக்கு பிறந்த மகள்தான் ஆனால் நான் அவளுக்கு அப்பா இல்லை என்று அப்போதே ஒருவர் வாக்குமூலம் அளித்து, இவர் போன்றோர்களுக்கு முன்னோடியாய் இருந்துள்ளார். வழக்கிலிருந்து எப்படியாவது விடுதலை அடையவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான்.
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
24-ஆக-202110:01:57 IST Report Abuse
Kanthan Iyengaar இவனுக்கு புரிஞ்சு பேசின கேடி ராகவனை பி ஜெ பி தலைவரா போட நினைக்கிறாளாம்...எத பார்த்து சிரிப்பதுன்னுட்டே நேக்கு தெரியல ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா ... அசிங்கப்பட கியூவுல வான்டெடா நிக்கறவாளுக்கும் பி ஜெ பிக்கும் நெருங்கின பந்தம் இருக்கா வ்வொய்?
Rate this:
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
26-ஆக-202111:31:17 IST Report Abuse
Vivekanandan Mahalingamஉண்மையான பெயர் என்ன?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X