நான் ஆண்மையற்றவன்: சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான் ஆண்மையற்றவன்: சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (47)
Share
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா, தனது ஜாமின் மனுவில், ‛தான் ஆண்மையற்றவன்' எனக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி
சிவசங்கர் பாபா, ஆண்மையற்றவன், சிபிசிஐடி, வாக்குமூலம்

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா, தனது ஜாமின் மனுவில், ‛தான் ஆண்மையற்றவன்' எனக்கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் டில்லியில் கைது செய்தனர்.


latest tamil news


தனக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என சிவசங்கர் பாபா கோரியிருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்காமல் இரண்டு மனுக்களையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. முன்னதாக முதல் போக்சோ வழக்கிலும் பாபாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்நிலையில், ‛தனக்கு ஆண்மை இல்லை' என்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையில் ஆண்மை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


இதுதொடர்பான அவரது ஜாமின் மனுவில், தான் ஒரு ஆண்மையற்றவன் என்பதால் யாரையும் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அதனால் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு கோரியிருந்த நிலையில், மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? என்று ஜாமின் மனு மீதான வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X