அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயிரை அச்சுறுத்தும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: ‛‛பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற தனது வேண்டுகோளை திமுக.,வினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' எனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர்
Tamilnadu, CM, Stalin, Banner, தமிழகம், தமிழ்நாடு, முதல்வர், ஸ்டாலின், பேனர், பேனர் கலாசாரம், முற்றுப்புள்ளி

சென்னை: ‛‛பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற தனது வேண்டுகோளை திமுக.,வினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' எனவும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத, கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.,வினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன். 13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NRajasekar - chennai ,இந்தியா
24-ஆக-202106:59:30 IST Report Abuse
NRajasekar இதுக்கு ஒரு பேனர் தமிழ்நாடு பூரா ஒரு. ஜென்டலெமென் மிகுந்த தன்னடக்கம் உள்ளவர் தற்பெருமை கெடையாது மோசமாக உடல் பதிகிக்கப்பட்டு பெட் இருந்தார் ஊர் மூஸுவதும் வந்து பார்த்தார்கள் அவரை புகந்து பேசினார்கள் எல்லோரும் போயேவிட்ட பிறகு தந் அப்த் நண்பர் கிட்டே தனக்கு தற்பெருமை பிடிக்காது என்பதை சொன்னார்களா என்று கேட்டார்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
24-ஆக-202103:27:25 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் இந்த பையன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறலாம் ,அதுவும் ஒரு வகையில் நல்லதுதானே ,உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே இந்த கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ?
Rate this:
Cancel
Rajasekaran - chennai,இந்தியா
24-ஆக-202100:33:12 IST Report Abuse
Rajasekaran அமைச்சர் பொன்முடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். அனுமதி வாங்காமல் பேனர் வைத்த ஆளும் கட்சியை பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிஇல் சுபஸ்ரீ. திமுக ஆட்சில் தினேஷ். திராவிட கட்சிகள் ஒரே குட்டை இல் ஊறிய மட்டைகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X