சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மழை என்றாலே அலர்ஜி!

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மழை என்றாலே அலர்ஜி!'விளம்பரத்துக்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் விபரீதமாக முடியும்...' என, மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நரோத்தம் மிஸ்ராவை கிண்டலடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நரோத்தம் மிஸ்ரா, முதல்வர் சவுகானுக்கு அடுத்தபடியாக ம.பி., மாநில பா.ஜ.,வில்

 அக்கம் பக்கம்


மழை என்றாலே அலர்ஜி!



'விளம்பரத்துக்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் விபரீதமாக முடியும்...' என, மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நரோத்தம் மிஸ்ராவை கிண்டலடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நரோத்தம் மிஸ்ரா, முதல்வர் சவுகானுக்கு அடுத்தபடியாக ம.பி., மாநில பா.ஜ.,வில் செல்வாக்கு மிக்க தலைவர். இதனால் தான், இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு விளம்பர பிரியர். தன்னைப் பற்றிய ஏதாவது ஒரு தகவல் தினமும் ஊடகங்களில் வெளிவர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இதை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நரோத்தம் மிஸ்ரா சென்றார். அவருடன் கேமரா சகிதமாக பெரும் படையையும்
அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் திடீரென மழை அதிகரித்தது. அமைச்சர் சென்ற இடத்தை வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்து சாலை மார்க்கமாக அவரால் வெளியேற முடியவில்லை. 'தேவையில்லாமல் இங்கு வந்து மாட்டி விட்டோமோ' என, புலம்பித் தீர்த்தார். நீண்ட போராட்டத்துக்குப் பின், அமைச்சரும், அவருடன் சென்றவர்களும் ஹெலிகாப்டர்கள் வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர். வீடு திரும்பிய நரோத்தம் மிஸ்ரா. 'இனி மழை என்ற வார்த்தையை கேட்டாலே வாழ்நாள் முழுதும்
அலர்ஜியாகி விடும்' என, நடுங்கியபடியே கூறுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X