சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் முருகன்: பா.ஜ., சொல்வதை செய்யும் கட்சி. சட்டசபை தேர்தலின் போது சொன்னது போல, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் வெற்றிக்கு பாடுபட்ட மாவட்ட தலைவர்களுக்கு, 'டயோட்டோ இன்னோவா' கார்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் சொல்வதைத் தான் செய்வோம். தி.மு.க., போல இல்லை.'டவுட்' தனபாலு: பா.ஜ., தலைவர்கள் எப்போதுமே, கட்சிக்கு நன்மை செய்பவர்கள் தான். அதனால் தான், நான்கு


'டவுட்' தனபாலு

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் முருகன்: பா.ஜ., சொல்வதை செய்யும் கட்சி. சட்டசபை தேர்தலின் போது சொன்னது போல, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களின் வெற்றிக்கு பாடுபட்ட மாவட்ட தலைவர்களுக்கு, 'டயோட்டோ இன்னோவா' கார்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் சொல்வதைத் தான் செய்வோம். தி.மு.க., போல இல்லை.

'டவுட்' தனபாலு: பா.ஜ., தலைவர்கள் எப்போதுமே, கட்சிக்கு நன்மை செய்பவர்கள் தான். அதனால் தான், நான்கு தொகுதிகளில் மட்டும், பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்து, கட்சிக்கு கார் செலவு வைக்காமல் இருந்து விட்டனரோ என்ற 'டவுட்' ஏற்படுகிறது. போட்டியிட்ட 20 தொகுதிகளிலும், பா.ஜ., வென்றிருந்தால் 40 - 50 இன்னோவாக்களை தமிழக, பா.ஜ., வாங்க வேண்டியிருந்திருக்கும். காப்பாற்றி விட்டனர், கட்சித் தலைவர்கள்!


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த, தி.மு.க., இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, அதை கண்டுகொள்ளாமல், இரட்டை வேடம் போடுவது வெட்கக் கேடானது.

'டவுட்' தனபாலு: தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., நிறைவேற்ற தயங்குகிறது என, அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகள் தான் கூறி வருகின்றன. கம்யூ.,க்கள் காங்., போன்ற தி.மு.க., கூட்டணி கட்சிகள் வாயைத் திறப்பதே இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க, இப்போது நீங்களும் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளீர்கள். இதனால் வரவிருக்கும் தேர்தல்களில் கட்சிகளின் வாக்குறுதிகளை மக்கள் நம்பாமல், நேர்மையாக சிந்தித்து ஓட்டளிப்பரோ என்ற 'டவுட்' வருகிறது!


பத்திரிகை செய்தி:
தமிழகத்தை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, இல.கணேசன், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வட கிழக்கு மாநில மக்களுக்காக தொண்டாற்றுவேன் என, இல.கணேசன் கூறியுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

'டவுட்' தனபாலு: அயராது கட்சிப் பணியாற்றினால், எப்படியும் நல்ல பதவி, சலுகைகள் வழங்கப்படும் என்பதை, பா.ஜ., அடிக்கடி நிரூபித்து வருகிறது. இல.கணேசன் போன்றவர்களுக்கு கவர்னர் பதவியை வழங்கியிருப்பதன் மூலம், பா.ஜ.,வின் குணம் மக்களுக்கு 'டவுட்' இன்றி புரிகிறது. கவர்னர் பதவிக்கு பொருத்தமானவர் தான் கணேசன்!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopal - chennai,இந்தியா
24-ஆக-202107:42:14 IST Report Abuse
gopal தேர்தல்களில் கட்சிகளின் வாக்குறுதிகளை மக்கள் நம்பாமல், நேர்மையாக சிந்தித்து ஓட்டளிப்பரோ என்ற 'டவுட்' வருகிறது உண்மைதான் . பெரும்பாலான தமிழர்கள் நேர்மையாக சிந்தித்து வெகுநாட்களாக ஆகிவிட்டது.இலவசங்களுக்கு விலை போய் விட்டார்கள் .பிச்சையெடுக்கும் காலம் விரைவில் வரும் போல உள்ளது.
Rate this:
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
24-ஆக-202107:08:07 IST Report Abuse
P Sundaramurthy முடியல இறைவா எங்களை காப்பாற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X