சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மீண்டும் உருவாகிறது சென்னை புறநகர் கமிஷனரகம்?

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மீண்டும் உருவாகிறது சென்னை புறநகர் கமிஷனரகம்?''மாவட்டத்துக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன்... சமீபத்துல கட்aசியில சேர்ந்து, மாநில விவசாய அணி துணை தலைவராகவும், பர்கூர்


டீ கடை பெஞ்ச்


மீண்டும் உருவாகிறது சென்னை புறநகர் கமிஷனரகம்?


''மாவட்டத்துக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன்... சமீபத்துல கட்aசியில சேர்ந்து, மாநில விவசாய அணி துணை தலைவராகவும், பர்கூர் எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறவர் மதியழகன்... ரெண்டு பேருக்கும் கடும் பனிப்போர் ஓடிட்டு இருக்கு வே...

''சமீபத்துல, கருணாநிதி நினைவு தின அஞ்சலியில கூட, ரெண்டு பேரும் தனித்தனியாதான் கலந்துக்கிட்டாவ...

''தனக்கு கிடைக்க இருந்த அமைச்சர் பதவியை செங்குட்டுவன் தடுத்துட்டதா, மதியழ கனும், கிருஷ்ணகிரி தொகுதியில தனக்கு வேலை செய்ய இருந்த நிர்வாகிகள் பலரை, மதியழகன் பர்கூருக்கு தள்ளிட்டு போயிட்டதால, தான் தோத்து போயிட்டதா செங்குட்டுவனும் நினைக்காவ வே...

''மதியழகனை மட்டம் தட்ட, ரஜினி மன்றத்துல இருந்து விலகி, சமீபத்துல கட்சியில சேர்ந்த கே.வி.எஸ்.சீனிவாசனை செங்குட்டுவன் வளர்த்து விடுதாரு...

''இப்படி, ஏட்டிக்கு போட்டியா ரெண்டு தரப்பும் செயல்படுறதால, தொண்டர்கள் மண்டை காய்ஞ்சு போய் கிடக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கட்டிங் கேட்டு கிடைக்காததால, 'நோட்டீஸ்' அனுப்பிட்டாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு மாறினார் அந்தோணிசாமி.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சேலம் மண்டல போக்குவரத்து கழகத்துல, 17 டிப்போக்கள் இருக்கு... இங்க இருக்கிற கேன்டீன்களை, இந்த வருஷம் ஜனவரியில தான் குத்தகைக்கு விட்டாங்க... அ.தி.மு.க., புள்ளிகள் தான் எடுத்து நடத்திட்டு இருக்காங்க...

''இப்ப, ஆட்சி மாறிட்டதால, குத்தகைதாரர்களுக்கு நிர்வாகம் தரப்புல நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க... அதுல, 'தரமில்லாத உணவு சப்ளை செய்றதால, மாற்று ஏற்பாடு செய்ய நிர்வாகத்துக்கு அதிகாரம் இருக்கு... இதுக்கு மூணு நாள்ல விளக்கம் தரணும்'னு சொல்லியிருக்காங்க...

''குத்தகைதாரர்கள் தரப்புல, 'ஆட்சி மாறியதும், தி.மு.க., தொழிற்சங்கத்தினரை கவனிக்கணும்... 2 லட்சம் ரூபாய் வேணும்'னு கேட்டாங்க... அதை தர மறுத்துட்டதால, இப்படி நோட்டீஸ் அனுப்பி மிரட்டுறாங்க... இதை சட்டப்படி சந்திப்போம்'னு சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''மறுபடியும் புது கமிஷனர் ஆபீசை திறக்கணும்னு வலியுறுத்திண்டு இருக்கா ஓய்...'' என, இறுதி மேட்டருக்கு வந்தார் குப்பண்ணா.

''போலீஸ் தகவலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாம்... போன, 2005ல ஜெயலலிதா ஆட்சி நடந்தப்ப, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தை ஒருங்கிணைத்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஆபீசை உருவாக்குனாங்க...

''அப்பறமா, 2008ல கருணாநிதி முதல்வரா இருந்தப்ப, கமிஷனரகத்தை ரெண்டா பிரிச்சு, பரங்கிமலையில புறநகர் போலீஸ் கமிஷனர் ஆபீசை திறந்தார் ஓய்...

''பிறகு, 2011ல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், புறநகர் கமிஷனர் ஆபீசை கலைச்சு, சென்னையோட இணைச்சுட்டாங்க...

''இப்ப, தி.மு.க., ஆட்சி வந்துட்டதால, புறநகர் கமிஷனர் ஆபீசை மீண்டும் உருவாக்கணும்னு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தரப்புல சிலர் முயற்சி பண்றா... அதுல முக்கிய பதவிகளை பிடிச்சு, பந்தாவா வலம் வரலாம்னு, ஆட்சி மேலிடத்துக்கு ஐடியா தந்துண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.பெஞ்சில் கூட்டம் அதிகரிக்க, நண்பர்கள் நடையை கட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X