பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஆக., 24, 1961நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், 1897 பிப்., 25ம் தேதி பிறந்தவர், வேதரத்தினம் பிள்ளை. இளம் வயதிலேயே காங்கிரசில் இணைந்தார். 1930ல் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக பேரணியை வெற்றிகரமாக முன்னின்று நடத்தினார். அதனால் இவர் கைது செய்யப்பட்டார்; இவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.திருநெல்வேலியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் இவருக்கு, 'சர்தார்' பட்டம்


இதே நாளில் அன்று


ஆக., 24, 1961



நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், 1897 பிப்., 25ம் தேதி பிறந்தவர், வேதரத்தினம் பிள்ளை. இளம் வயதிலேயே காங்கிரசில் இணைந்தார். 1930ல் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக பேரணியை வெற்றிகரமாக முன்னின்று நடத்தினார். அதனால் இவர் கைது செய்யப்பட்டார்; இவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.திருநெல்வேலியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் இவருக்கு, 'சர்தார்' பட்டம் வழங்கப்பட்டது. 1929 முதல் 1939 வரை தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டார். 1929ல் வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், சர்தார் வல்லபாய் படேலை பங்கேற்க செய்தார். 1935ல் வேலுாரில் நடந்த காங்கிரஸ் மாநில மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார். காந்தியின் மனைவி கஸ்துாரிபாய் நினைவாக நிதி திரட்டி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பல பெண்கள் குழந்தைகள் நல மையங்களையும், மகப்பேறு மருத்துவமனைகளையும் நிறுவினார். 1946ல், 'கஸ்துாரிபாய் கன்யா' குருகுலத்தை நிறுவினார். சென்னை மாகாணத்தின் சட்டசபை உறுப்பினராக, 14 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். 1961 ஆக., 24ம் தேதி, தன் 64வது வயதில் காற்றில் கலந்தார்.சர்தார் வேதரத்தினம் பிள்ளை காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X