தலிபான்களுக்கு எதிராக டில்லியில் இந்தியர்கள் போராட்டம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக டில்லி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் ஆப்கன் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் வயது முதிர்ந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அதிகம்.ஆப்கன் அகதிகள் பலர் இந்தியர்களின் கனிவான உள்ளத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அகதிகளாக டில்லிக்கு வந்து சேர்ந்த அவர்களை இந்திய அரசு

புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக டில்லி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் ஆப்கன் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் வயது முதிர்ந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அதிகம்.latest tamil news
ஆப்கன் அகதிகள் பலர் இந்தியர்களின் கனிவான உள்ளத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் அகதிகளாக டில்லிக்கு வந்து சேர்ந்த அவர்களை இந்திய அரசு மனிதநேயத்துடன் நடத்துவதாக கூறிவருகின்றனர். ஆப்கானிஸ்தானுடன் மோடி அரசு என்றுமே சுமூகமான உறவில் இருந்ததால் இந்திய குடிமக்கள் பலருக்கு ஆப்கன் குடிமக்கள்மீது எப்போதும் தனி அக்கறை உண்டு.

டில்லியின் மாண்டி ஹவுஸ் பகுதியில் இந்தியர்கள், ஆப்கன் அகதிகள் பலர் 'ஆப்கானிஸ்தான் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டும்' என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் மாணவர்கள் பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில் தலிபான்கள் அனைவரும் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளனர் என்றார்.

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை அளிப்போம் என்று கூறி பெண் குழந்தைகளின் கல்வியை தடுப்பதாக குற்றம் சாட்டிய அவர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் கூறுகையில் தான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். தனது உறவினர்கள் சிலர் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருப்பதாகவும் விரைவில் அவர்களை இந்திய விமானப்படை மீட்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


latest tamil newsஆப்கானிஸ்தானில் உள்ள வீடுகளில் தாலிபான்கள் சோதனை இடுவதாகவும் அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் குடிமக்கள் யாராவது பணியாற்றினால் அவர்களுடனே கொல்லப்படுவதாக அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தான் ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தனது உறவினர் யாராவது ஒருவர் தினமும் கொல்லப்படும் கொடூரமான செய்தியை அறிந்ததாகும் இந்தியா வந்து இறங்கியதும் தாங்கள் நிம்மதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
24-ஆக-202108:30:39 IST Report Abuse
sankaseshan Parse community which was driven from Persia, present day Iran have mingled with Indian culture. Established education institutions and industries.
Rate this:
Cancel
24-ஆக-202108:28:13 IST Report Abuse
பேசும் தமிழன் இருக்கிற அகதிகளை கட்டுபடுத்தவே தடுமாறி கொண்டு இருக்கிறோம்... இவர்களை அவர்கள் மதம் சார்ந்த நாடுகளே (பாகிஸ்தான். பங்களாதேஷ்,. சவுதி அரேபியா) போன்ற நாடுகளே ஏற்று கொள்ளாத போது... இந்தியாவுக்கு இது வேண்டாத வேலை
Rate this:
Cancel
24-ஆக-202107:46:28 IST Report Abuse
ravi chandran இவர்களை வரவிடாமல் தடுப்பதே நன்று, முதலில் கெஞ்சுவார்கள் பிறகு இஸ்லாமிய நாடாக இந்தியா மாற்ற வேண்டும் என கூறுவார்கள். தலைவலி தான். அனுபவங்களால் பாடம் கொள்ளாத வரை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X