பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகங்களில் 'சிசிடிவி' இனி... தப்ப முடியாது...!ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அதிரடி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கோவையில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும், முறைகேடுகளை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, அரசு அவ்வப்போது, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

பெ.நா.பாளையம்:கோவையில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும், முறைகேடுகளை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, அரசு அவ்வப்போது, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஆனாலும், முறைகேடுகளை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. அரசு அலுவலகங்களில், பணிச்சுமை என்ற காரணத்தை வைத்து தனிநபர்கள் ஆவணங்களை கையாள்வதும், அலுவலகத்தில் இருந்து வெளியே எடுத்து சென்று நகல் எடுப்பது, இதனால் ஆவணங்களை செயற்கையாக காணாமல் போக செய்வது என அதிகரித்து வருகிறது.இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்படும் என, உயரதிகாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.கோவை வடக்கு பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளில், 'சிசிடிவி' இன்னும் பொருத்தப்படவில்லை. இதனால், ஊராட்சி அலுவலகங்களில் தனிநபர்கள் ஆதிக்கம் செலுத்துவதும், பெண் தலைவர்களின் உறவினர்கள், ஊராட்சியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், இதற்கு நேரடியான, உரிய ஆதாரம் இல்லாததால் நடவடிக்கை எடுப்பதில் தொய்வு ஏற்பட்டது. பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில், 'சிசிடிவி' பொருத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாதேவி, அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், ஒன்றிய அலுவலகம் மற்றும் சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகங்களில், ஏற்கனவே 'சிசிடிவி' பயன்பாட்டில் உள்ளது. கடந்த, 4 நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில், தலைவர், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயலாளர் உட்பட அடிப்படை ஊழியர்கள் தவிர, தற்காலிக பணியாளர்கள் யாரும் அலுவலகத்தில் பணியாற்றக் கூடாது என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்திலும், 'சிசிடிவி' பொருத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டதை, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X