பொது செய்தி

தமிழ்நாடு

கேட்பது கிடைக்குமா?

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சோமனுார்:விசைத்தறி புதிய கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, வரும் 26ம் தேதி கோவையில் நடக்கிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில், 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. தொழிலில், பல ஆயிரம் பேர், நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் முன்னிலையில்

சோமனுார்:விசைத்தறி புதிய கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, வரும் 26ம் தேதி கோவையில் நடக்கிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில், 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. தொழிலில், பல ஆயிரம் பேர், நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் விசைத்தறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, கூலி குறித்த ஒப்பந்தத்தை இறுதி செய்து வந்தனர். 2017 மற்றும் 2020ல் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை, பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.கடந்த ஜூன் மாதம், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், இரு மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, கோவை, திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை இரு முறை நடந்தது.விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. வரும், 26ல் கோவையிலும், 27ல் திருப்பூரிலும் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைக்கு, விசைத்தறி சங்கத்தினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஏழு ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறோம். 60 சதவீத கூலி உயர்வு கிடைத்தால் மட்டுமே, எங்களால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். நல்ல முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயாராகி உள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X