பொது செய்தி

தமிழ்நாடு

எல்லாம் தெரிஞ்சுகிட்டா... 'கெத்து' காட்டலாம்...! மாவட்ட உதவி திட்ட அலுவலர் பேச்சு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அன்னுார்:''ஊராட்சி சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டால் கெத்தாக நிர்வாகம் செய்யலாம்,'' என, ஊராட்சி தலைவர்களுக்கு, மாவட்ட உதவி திட்ட அலுவலர் அறிவுறுத்தினார்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார்.மாவட்ட உதவி திட்ட
 எல்லாம் தெரிஞ்சுகிட்டா... 'கெத்து' காட்டலாம்...!  மாவட்ட உதவி திட்ட அலுவலர் பேச்சு

அன்னுார்:''ஊராட்சி சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டால் கெத்தாக நிர்வாகம் செய்யலாம்,'' என, ஊராட்சி தலைவர்களுக்கு, மாவட்ட உதவி திட்ட அலுவலர் அறிவுறுத்தினார்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் முத்துக்குமாரசாமி பேசியதாவது:ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி சட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ஊராட்சி சட்டங்கள் 262 உள்ளன. ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி சட்டங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருக்க வேண்டும். தினமும் 10 சட்டங்களை வாசித்தால், ஒரு மாதத்தில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு உரிய பதிலளிக்க ஊராட்சி சட்டங்களை தெரிந்திருப்பது அவசியம். தலைவர்கள் ஊராட்சியில் உள்ள 31 பதிவேடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, வரி கேட்பு பதிவேட்டை பார்க்க வேண்டும். காண்பிக்கும் ஆவணங்களில் எல்லாம் கையெழுத்திட கூடாது. முழுமையாக படித்த பின்பே கையெழுத்திட வேண்டும். ஊராட்சி தலைவர்கள் பச்சை மையில் கையெழுத்திடுவதற்கு உரிமை இல்லை.
ஊராட்சியில் எவ்வளவு குழாய்கள், போர்வெல்கள், தொட்டிகள் உள்ளன.ஊராட்சி வருவாயை எப்படி பெருக்குவது என தெரிந்து கொள்ள வேண்டும். அரை ஆண்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் அனைவரிடமும் தொழில் வரி வசூலிக்க வேண்டும். 20 ஆயிரத்து ஒன்று முதல், 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவோரிடம் தொழில் வரியாக 135 ரூபாயும், 30 ஆயிரத்து ஒன்று முதல், 45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுவோரிடம் 315 ரூபாயும் வசூலிக்க வேண்டும்.ஊராட்சி அலுவலகம் காலை 10:00 மணிக்கு திறந்து மாலை 5:30 மணி வரை செயல்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டும்.
துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்கள், மோட்டார் ஆபரேட்டர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? என பார்க்க வேண்டும். ஊராட்சி சட்டம் தெரிந்தால் கெத்தாக நிர்வாகம் செய்யலாம்; வரி வருவாயைப் பெருக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, அசோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஊராட்சி தலைவர்கள் பேசுகையில், 'ஊராட்சிக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். கூடுதல் அதிகாரம் வேண்டும். ஊராட்சியில் இருந்து அனுமதி கேட்டு அனுப்பும் கடிதங்களுக்கு, உடனுக்குடன் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X