பொது செய்தி

தமிழ்நாடு

குறைகேட்பு முகாமில் 14 பேருக்கு 'கிடைத்தது'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில், 14 பேருக்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக, ஒவ்வொரு வாரமும், திங்களன்று, கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடந்து வந்த குறைகேட்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. நேற்று, அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், துணை கலெக்டருமான துரைசாமி தலைமையில் நடந்தது. 30 மனுக்கள்
 குறைகேட்பு முகாமில்  14 பேருக்கு 'கிடைத்தது'

அன்னுார்:அன்னுாரில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில், 14 பேருக்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக, ஒவ்வொரு வாரமும், திங்களன்று, கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடந்து வந்த குறைகேட்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. நேற்று, அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், துணை கலெக்டருமான துரைசாமி தலைமையில் நடந்தது. 30 மனுக்கள் பெறப்பட்டன. பேரூராட்சிக்கு மூன்று, அன்னுார், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு தலா ஒன்று, நெடுஞ்சாலைத்துறைக்கு ஒன்று என, ஆறு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.முதியோர் உதவித்தொகை கோரிய வடக்கலூரைச் சேர்ந்தவருக்கு உத்தரவு வழங்கப்பட்டது. ஐந்து பேருக்கு புதிய ரேஷன் கார்டு, மூன்று பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு, வருமான சான்று, இருப்பிட சான்று உட்பட சான்றுகள் ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. தாசில்தார்கள் ரத்தினம், ரங்கராஜன், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் துறை உட்பட பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X