பொது செய்தி

தமிழ்நாடு

எப்படிங்க சாத்தியமாகும் பொதுமக்கள் வாக்குவாதம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சூலுார்:குறைவான தடுப்பூசி ஒதுக்கியதால், காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமி நாயக்கன் பாளையத்தில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. 200 டோஸ் தடுப்பூசி வந்திருந்த நிலையில், 500 பேருக்கும் மேல் வரிசையில் காத்திருந்தனர். குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள

சூலுார்:குறைவான தடுப்பூசி ஒதுக்கியதால், காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமி நாயக்கன் பாளையத்தில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. 200 டோஸ் தடுப்பூசி வந்திருந்த நிலையில், 500 பேருக்கும் மேல் வரிசையில் காத்திருந்தனர். குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலறிந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 20 ஊராட்சிகளும், 80க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. சந்திரா புரம், வாரப்பட்டி சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அவை தொலைவில் உள்ளதால், அந்தந்த ஊராட்சி பகுதியில் வந்து தடுப்பூசி போட கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால், 2,000ம் பேருக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு வெறும், 200 தடுப்பூசி மட்டும் ஒதுக்கீடு செய்கின்றனர். தடுப்பூசி போடுவது காலையில்தான் தெரியவருகிறது. அதற்குள் பலரும் வேலைக்கு சென்று விடுகின்றனர். அதிக மக்கள் வசிக்கும் பகுதிக்கு, கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து, மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X