பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் சரமாரி புகார் நடவடிக்கைக்கு உறுதி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:கொடியேற்று விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.,விடம் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.கீரணத்தம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் ஸ்டாப்பில், அ.தி.மு.க., சார்பில், அண்ணா தொழிற்சங்க விழா நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார்.அப்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள், எம்.எல்.ஏ.,விடம், 'இங்கு செப்டிக்

கோவில்பாளையம்:கொடியேற்று விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.,விடம் மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.கீரணத்தம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் ஸ்டாப்பில், அ.தி.மு.க., சார்பில், அண்ணா தொழிற்சங்க விழா நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் கொடியேற்றி, பெயர் பலகையை திறந்து வைத்தார்.அப்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள், எம்.எல்.ஏ.,விடம், 'இங்கு செப்டிக் டேங்க் கசிந்து, கழிவு நீர் செல்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவதில்லை. கொசுத்தொல்லை உள்ளது. உப்புத்தண்ணீருக்கே கடும் பற்றாக்குறை உள்ளதால் நீண்ட தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்' என்றனர்.இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார். இதையடுத்து குறிஞ்சி நகர் மற்றும் காந்தி நகரில் கிளைக் கழகங்களை துவக்கி வைத்து கொடியேற்றினார். தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சின்னராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X