பொது செய்தி

இந்தியா

செப்., - அக்.,ல் 3வது அலை மத்திய அரசு எச்சரிக்கை

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (3+ 7)
Share
Advertisement
புதுடில்லி,: 'செப்., - அக்., மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும்' என, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து, தொற்று பாதிப்பு நாடு முழுதும் சற்று குறையத் துவங்கி உள்ளது.ஆதாரங்கள் இல்லைஊரடங்கில் பெரும் அளவிலான தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்
செப்., - அக்.,ல் 3வது அலை மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி,: 'செப்., - அக்., மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை உருவாகும்' என, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து, தொற்று பாதிப்பு நாடு முழுதும் சற்று குறையத் துவங்கி உள்ளது.


ஆதாரங்கள் இல்லை



ஊரடங்கில் பெரும் அளவிலான தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மூன்றாவது அலை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் விபரம்:மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என கூறப்படுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.ஒருவேளை மூன்றாவது அலை, குழந்தைகளை பெரும் அளவில் தாக்கினால் நம்மிடம் உள்ள குழந்தைகள் நல மருத்துவ வசதி, டாக்டர்கள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் போன்ற வசதிகளில் தட்டுப்பாடு ஏற்படும்.


தடுப்பூசி



தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள குழந்தைகளில் 70 சதவீதம் பேர் இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம்.கொரோனா வைரசின் இனப்பெருக்க விகிதம், இம்மாத துவக்கத்தில் 1.0 ஆக இருந்தது.

இரண்டாவது அலைக்கு முன், கடந்த மார்ச்சில் இந்த இனப்பெருக்க விகிதம் 1.32 ஆக இருந்தது. எனவே, மூன்றாவது அலை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.செப்., - அக்., மாதங்களில் மூன்றாவது அலை துவங்கும். அப்போது, நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட கூடும் என, கான்பூர் ஐ.ஐ.டி.,
எச்சரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-ஆக-202113:55:30 IST Report Abuse
மலரின் மகள் அரசு அதற்கு ஆயத்தமாக இல்லை என்று சொல்லலாம். தடுப்பூசிகளை தாராளமாக கிடைக்க செய்யவேண்டும். போலியோ சொட்டு மருந்து திட்டம் செயல்படுவது போல செயல்படுத்தவேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் வசதிகளை மேம்படுத்தவேண்டும். தட்டுபாடில்லாமல் மருந்துகள் கருவிகள் போக்குவரத்து நிர்வாக சிக்கல்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். விஜிலென்ஸ் மிக முக்கியம். எந்த ஒரு பேரிடரிழும் அதற்காகவே காத்திருப்பது போல கொடிகளை கொள்ளை அடிக்க பலர் காத்திருப்பார்கள். அதற்கு வழியில்லாமல் செய்யவேண்டும். பேரிடர் விஷயத்தில் கொள்ளை அடிப்போருக்கு சாகும்வரை ஜெயில் தண்டனை என்று செயல் படுத்தவேண்டும். நன்றி.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
24-ஆக-202110:00:06 IST Report Abuse
Chakkaravarthi Sk இந்த நேரத்தில் தமிழக அரசின் அமைச்சர்களும் முதல்வரும் பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளனர் அண்ணல் நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். பள்ளி கல்லூரிகளை திறந்தாள் கொரோன அபாயம் இருக்காதா? இந்த திறப்பு அறிவிப்பிற்கு ஒரு மாதம் முன்னரே பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு தடுப்பு ஊசி முகாம் நடத்தி இருந்திருக்கலாமே. மேலும் பள்ளிகள் கல்லூரிகள் திறந்த பின்னர் ஒவ்வொரு பள்ளி அல்லது கல்லூரியிலும் மாணவர்களுக்கும் மாணவியருக்கும் தடுப்பு ஊசி போடலாமே இதையாவது செய்வார்களா? வெறும் அரசு மருத்துவ மனைகளில் இருபத்து நன்கு மணி நேரம் ஊசி போடப்படும் என்றால் பள்ளியிலும் கல்லூரியிலும் பயில்பவர்கள் எப்படி சென்று ஊசி போட்டு கொள்ள முடியும் என்பதே என் கேள்வி குறைந்தது ஒரு முறையாவது தடுப்பு ஊசி போட்டவர்கள் மட்டுமே கல்வி நிலையங்களுக்கு வரலாம் என்று அறிவித்தல் போதுமே
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-ஆக-202107:39:15 IST Report Abuse
J.Isaac நிச்சயம் அரசு துறைகளில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஒருவர் கூட பொருளாதார ரீதியாக இந்த அலையில் பாதிக்கப்பட போவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X