பா.ஜ.,வை வீழ்த்துவது எப்படி? கட்சிகளுக்கு சிவசேனா அறிவுரை!| Dinamalar

பா.ஜ.,வை வீழ்த்துவது எப்படி? கட்சிகளுக்கு சிவசேனா அறிவுரை!

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (24)
Share
மும்பை :'எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனத்துடன், சாமர்த்தியமாக காய் நகர்த்தினால் மட்டுமே 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த முடியும்' என, சிவசேனா தெரிவித்துள்ளது. தலையங்கம்மாநில ஆளும் கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் நேற்று வெளியான தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: தேர்தல் களத்திலும், அரசியல் சதுரங்கத்திலும் பா.ஜ.,வைத்
பா.ஜ.,வை வீழ்த்துவது எப்படி? கட்சிகள், சிவசேனா அறிவுரை

மும்பை :'எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனத்துடன், சாமர்த்தியமாக காய் நகர்த்தினால் மட்டுமே 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த முடியும்' என, சிவசேனா தெரிவித்துள்ளது.


தலையங்கம்



மாநில ஆளும் கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் நேற்று வெளியான தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: தேர்தல் களத்திலும், அரசியல் சதுரங்கத்திலும் பா.ஜ.,வைத் தோற்கடிக்க முடியும் என்பதை மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க தேர்தல்கள் உணர்த்தி உள்ளன.'ஜன் ஆசீர்வாத் யாத்திரை' என்ற பெயரில் நன்றி அறிவிப்பு பேரணிகளை பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களிலும் நடத்தி வருகின்றனர். அந்த யாத்திரையில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இது போன்ற நடவடிக்கைகள் மக்கள் மனதை மாற்றக்கூடும்.எனவே, எதிர்க்கட்சிகள் இப்போதே விழிக்க வேண்டும். அரசியல் சதுரங்கத்தில் புத்திசாலித்தனமாகவும், சாமர்த்தியமாகவும் காய்களை நகர்த்த வேண்டும். அப்போது தான் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த முடியும்.



எதிர்க்கட்சிகள்



காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகள் சமீபத்தில் பங்கேற்றன. இந்த 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.,வை வீழ்த்தி விடலாம் என குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X