பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயர்வு இல்லை :விவசாயிகள் 'அப்செட்'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் வாழைத்தார் ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், விலை உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மேட்டுப்பாளையம் - அன்னுார் சாலை, தென்திருப்பதி நால்ரோடு அருகே, தனியார் வாழைத்தார் ஏலம் மையம் செயல்படுகிறது. இங்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், புளியம்பட்டி, சத்தி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைகளை,

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் வாழைத்தார் ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், விலை உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மேட்டுப்பாளையம் - அன்னுார் சாலை, தென்திருப்பதி நால்ரோடு அருகே, தனியார் வாழைத்தார் ஏலம் மையம் செயல்படுகிறது. இங்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், புளியம்பட்டி, சத்தி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைகளை, இந்த ஏல மையத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஞாயிறு, புதன் கிழமைகளில் ஏலம் நடத்தப்படும். நேற்று முன்தினம் நடந்த ஏலத்துக்கு, 105 விவசாயிகள், 2,000 வாழைத்தார்களை கொண்டு வந்திருந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் யாரும் வரவில்லை. ஊட்டி, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மட்டும் பங்கேற்றனர்.ஒரு கிலோ நேந்திரன், கதளி வாழைக்காய் 15 - 32, ஒரு பூவன் வாழைத்தார் 200 - 550, தேன்வாழை 200 - 600, ரஸ்தாலி 200 - 500, செவ்வாழை 150 - 650, ரோபஸ்டா 150 - 350க்கு ஏலம் போனது. கடந்த ஒரு மாதமாக, இதே விலைக்கு ஏலம் விற்பனையாகி வருகிறது.மையத்தின் நிர்வாகி வெள்ளிங்கிரி கூறியதாவது: ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பழங்களின் தேவை குறைந்துள்ளன. கோவில்களுக்கு பக்தர்கள் பழங்களை கொண்டு செல்வதில்லை. திருமணம் உட்பட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெறவில்லை.வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தபோதும், தேவைகள் மிகவும் குறைவாக உள்ளதால், விலை உயர்வு இல்லை. விவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றனர். கோவில்களில் விழாக்கள், விசேஷங்கள் அதிகளவில் நடைபெறும் பொழுது, விலை உயர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X