அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேனர் கலாசாரம் வேண்டாம்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை : 'உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:கட்சி நிகழ்ச்சிகளுக்காக, பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு,
பேனர் கலாசாரம் வேண்டாம், ஸ்டாலின்

சென்னை : 'உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

கட்சி நிகழ்ச்சிகளுக்காக, பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில், உயிரை பறிக்கும் சோகமும் நடந்து விடுகிறது. விழுப்புரத்தில், கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி, இளம் வயதான தினேஷ், 13, மரணம் அடைந்திருப்பது, எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேனர் கலாசாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பல முறை கண்டித்தும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடர்வது, என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சியினர் என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-ஆக-202111:22:33 IST Report Abuse
Matt P பேனர் கலாச்சாரம் வேண்டாம் என்பதை விட ஆட்சியில் இருக்கும் தஆங்கள் தடை செய்து சட்டம் கொண்டுவரலாம்ஏ. இல்லாவிட்டால் வரைமுறையாவது ஏற்படுத்தலாம்.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
24-ஆக-202115:18:38 IST Report Abuse
Chakkaravarthi Sk இன்று முதல் நீவிர் பேனர் ஜீ என்று அழைக்கப்படுவீர் ஆக ஆனால் கொடி கட்டிய குமரன் இறப்பிற்கு எந்த அனுதாபமும் தெரிவிக்க வில்லையே வருத்தமாக உள்ளது உங்கள் கட்சிக்கொடி பறக்க நல்லகாரியந்தானே
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஆக-202115:05:48 IST Report Abuse
duruvasar பேனர் கலாச்சாரத்தை ஒழித்து பலமொழி பத்திரிக்கைகளில் முழுக்க விளம்பரங்களுக்கு மாற உறுதி ஏற்போம். இப்போது தொடங்கியுள்ள ஸ்டிக்கர் ஒட்டும் திட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்து பேனர் இல்லா முதன்மை ஊராட்சி ஒன்றியமாக தமிழகத்தை தலைநிமிர செய்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X