பேனர் கலாசாரம் வேண்டாம்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேனர் கலாசாரம் வேண்டாம்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (28)
Share
சென்னை : 'உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:கட்சி நிகழ்ச்சிகளுக்காக, பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு,
பேனர் கலாசாரம் வேண்டாம், ஸ்டாலின்

சென்னை : 'உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

கட்சி நிகழ்ச்சிகளுக்காக, பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில், உயிரை பறிக்கும் சோகமும் நடந்து விடுகிறது. விழுப்புரத்தில், கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி, இளம் வயதான தினேஷ், 13, மரணம் அடைந்திருப்பது, எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேனர் கலாசாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பல முறை கண்டித்தும், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடர்வது, என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும், பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சியினர் என் வேண்டுகோளை கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X