சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து ஏற்படுத்திய கார்: மடக்கி பிடித்த போலீசார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர்கள் காளியம்மாள், 45, கவிதா, 42. கடந்த 21ம் தேதி இரவு 9:30 மணிக்கு குரும்பபாளையத்தில் சத்தி சாலையை கடந்த போது, கோவையிலிருந்து அன்னுார் நோக்கி சென்ற கார், இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.அன்னுாரில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன எஸ்.ஐ., லோகநாதன் தலைமையிலான போலீசார், கரியாம்பாளையத்தில் அந்த காரை மடக்கி

கோவில்பாளையம்:கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர்கள் காளியம்மாள், 45, கவிதா, 42. கடந்த 21ம் தேதி இரவு 9:30 மணிக்கு குரும்பபாளையத்தில் சத்தி சாலையை கடந்த போது, கோவையிலிருந்து அன்னுார் நோக்கி சென்ற கார், இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.அன்னுாரில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன எஸ்.ஐ., லோகநாதன் தலைமையிலான போலீசார், கரியாம்பாளையத்தில் அந்த காரை மடக்கி பிடித்தனர். காரை ஓட்டி வந்த கோவை, வடவள்ளியை சேர்ந்த பெண்ணையும், காரையும், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கவிதா, சிகிச்சை பலனில்லாமல் பலியானார். காளியம்மாள், குரும்பபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X