சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

முதலீடுகளை உறவுகளிடம் சொல்லுங்கள்!

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை திடீர் மரணம், குடும்ப பிரச்னை போன்ற நேரங்களில் நாம் இழந்து விடுகிறோம். அதற்கு மாறாக, நம் சேமிப்பை முறைப்படி வசப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறுகிறார் நிதி ஆலோசகர் என்.விஜயகுமார்: வங்கி சேமிப்பு, மியூச்சுவல் பண்ட் முதலீடு, காப்பீடு என, 82 ஆயிரம் கோடி ரூபாய், யாராலும் கோரப்படாமல் கிடக்கிறது; முதலீட்டாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களின்
சொல்கிறார்கள்

கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை திடீர் மரணம், குடும்ப பிரச்னை போன்ற நேரங்களில் நாம் இழந்து விடுகிறோம். அதற்கு மாறாக, நம் சேமிப்பை முறைப்படி வசப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறுகிறார் நிதி ஆலோசகர் என்.விஜயகுமார்: வங்கி சேமிப்பு, மியூச்சுவல் பண்ட் முதலீடு, காப்பீடு என, 82 ஆயிரம் கோடி ரூபாய், யாராலும் கோரப்படாமல் கிடக்கிறது; முதலீட்டாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் கவனக்குறைவே.

தங்கள் குடும்ப உறுப்பினரின் நிதி குறித்து, பிற உறுப்பினர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.பிராவிடன்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பலரும் பணம் சேர்க்கின்றனர். ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்திற்கு தாவும் போது, முந்தைய நிறுவனத்தில் சேர்த்த, பி.எப்., பணத்தை வாங்க மறந்து விடுகின்றனர். அதனால் தான் இப்போது, ஒருவருக்கு துவக்கத்தில் கொடுக்கப்படும், பி.எப்., எண்ணையே பல காலத்திற்கும், பல நிறுவனங்களில் அவர் பணியாற்றும் போதும் வைத்துக் கொள்ளலாம்.அதுபோலத் தான் வங்கிக் கணக்கும். ஒரு ஊரில் பணியாற்றும் போது, அந்த ஊரில் உள்ள வங்கியில் கணக்கு துவக்குவோர், இன்னொரு ஊருக்கு மாற்றலாகி செல்லும் போது, அந்த வங்கிக் கிளையில் உள்ள பணத்தை எடுக்காமல் சென்று விடுகின்றனர். பெரும்பாலும் ஆன்லைனிலேயே வங்கிச் சேவைகளை செய்வதால், வங்கி பக்கமே அவர்கள் செல்லாமல் இருக்கின்றனர். இதனால், குடும்ப உறுப்பினர்களுக்கும் வங்கிக் கணக்கு விபரங்கள் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.எனவே, வீட்டில் உள்ள அனைவருக்கும், உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளது. அதில் எவ்வளவு தொகை உள்ளது என்பன போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, வங்கியில் இருந்து ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடுக்கான பிரீமியம் பிடிக்கப்படுகிறது.

எனவே, வங்கிக்கணக்கு விபரத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.அதுபோலவே, மியூச்சுவல் பண்ட், காப்பீடு போன்றவற்றில் செய்யும் முதலீடு குறித்த விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது.எனவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உட்கார வைத்து, அவர்களிடம் உங்கள் நிதி இருப்பு, வங்கி மற்றும் பிற நிதி சார்ந்த திட்டங்கள், முதலீடுகள் போன்றவற்றை சொல்ல வேண்டும். மேலும், இ - மெயில் மூலம் அந்த விபரங்களை உங்களின் உறவினர்கள், நிதி ஆலோசகர் போன்றவர்களுக்கும் அவ்வப்போது தெரிவித்து வர வேண்டியது இந்த காலகட்டத்தில் கட்டாயம்!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
24-ஆக-202110:00:43 IST Report Abuse
vbs manian சமயத்தில் இது ஆபத்தாய் முடிகிறது. பலர் அனுபவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X