இயற்கை உரத்தை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரத்தை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம்

Added : ஆக 23, 2021
Share
கமுதி : கமுதி அருகே விவசாயத்திற்கு இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.கமுதி அருகே கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லுார், பசும்பொன், ஆனையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் மழை துவங்குவதற்கு முன்பு விவசாயிகள் டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்து வைத்துஉள்ளனர். தற்போது இயற்கை உரத்தை பயன்படுத்த விவசாயிகள் முடிவு

கமுதி : கமுதி அருகே விவசாயத்திற்கு இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கு விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கமுதி அருகே கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லுார், பசும்பொன், ஆனையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் மழை துவங்குவதற்கு முன்பு விவசாயிகள் டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்து வைத்துஉள்ளனர். தற்போது இயற்கை உரத்தை பயன்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

உழவு செய்து வைக்கப்பட்ட நிலத்தில் இயற்கை உரங்களான கால்நடைகள் கழிவு,பிளாஸ்டிக் இல்லாத குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர்.கமுதி பகுதியில் மழை தொடங்கிய பின்பு இயற்கை உரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள நிலங்களில் மீண்டும் உழவு செய்தால் விவசாயத்தில் போதுமான விளைச்சல் கிடைக்கும்.இதன்மூலம் ரசாயன உரம் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X