பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அரியமான் கடலில் குடும்பத்தோடு குதூகலம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கொரோனா தடை உத்தரவு தளர்வுகளையடுத்து கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதால் நேற்று ராமநாதபுரம் அருகே அரியமான் கடற்கரை, சேதுக்கரை, தர்க்காவலசை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் இதுவரை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல்
 கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அரியமான் கடலில் குடும்பத்தோடு குதூகலம்

ராமநாதபுரம் : கொரோனா தடை உத்தரவு தளர்வுகளையடுத்து கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டதால் நேற்று ராமநாதபுரம் அருகே அரியமான் கடற்கரை, சேதுக்கரை, தர்க்காவலசை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.

உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் இதுவரை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் அனுமதியளிக்கப்பட்டதால் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்றனர். காலை 10:00 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்தது.உச்சிப்புளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரியமான் கடற்கரை அலைகளின்றி அமைதியாக இருப்பதால் மக்கள் கடலில் நீண்ட இடைவெளிக்கு பின் கூட்டம் கூட்டமாக நீராடி மகிழ்ந்தனர்.

கடற்கரை மணற்பரப்பில் குடும்பத்தோடு ஓடி விளையாடினர். அரியமான் கடற்கரையில் விஷ ஜெல்லிகளின் ஆபத்து இருப்பதால் போலீசார் அவ்வப்போது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்து வந்தனர்.நீண்ட நாட்களுக்கு பின் பொழுதுபோக்க கடற்கரைக்கு வந்ததால் மக்கள் அதிக மகிழ்ச்சியடைந்தனர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X