பொது செய்தி

இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல்: கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், செப்., 30ல் இருந்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.'நிதியாண்டு 2020 - 21க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, அடுத்த மாதம் 30ம் தேதி கடைசி நாள்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை, மத்திய அரசு ஜூனில் அறிமுகம்
வருமான வரி கணக்கு தாக்கல்  கடைசி தேதி நீட்டிக்கப்படுமா?

புதுடில்லி : வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், செப்., 30ல் இருந்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'நிதியாண்டு 2020 - 21க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, அடுத்த மாதம் 30ம் தேதி கடைசி நாள்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை, மத்திய அரசு ஜூனில் அறிமுகம் செய்தது. இந்த புதிய இணையதளத்தில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. 'வரி செலுத்துவோர், தொழில்நுட்ப கோளாறுகள், தடைகள் இன்றி எளிதாக கணக்கு தாக்கல் செய்ய, இந்த புதிய இணையதளம் வழிவகுக்கும்' என, அறிவிக்கப்பட்டது.


latest tamil newsஆனால், இந்த புதிய இணையதளம் துவங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக புகார் எழுந்தன.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை தாக்கல் செய்வதற்குள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பதாக சமூக வலைதளங்களில் பலர் புகார் தெரிவித்தனர்.இதன் காரணமாக, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள், செப்., 30ல் இருந்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விரிவான விளக்கம்இதற்கிடையே இணைய தளத்தை வடிவமைத்த, 'இன்போசிஸ்' நிறுனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலில் பரேக், மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார்.அப்போது புதிய இணையதளம் துவங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆகியும், அதில் கோளாறுகள் தொடர்வது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.அது குறித்து சலில் பரேக், அமைச்சரிடம் விரிவான விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajagopal - chennai,இந்தியா
25-ஆக-202118:25:25 IST Report Abuse
rajagopal software developer alone can not be blamed. we have to see how the client had given requirement clearly.
Rate this:
Cancel
S.Pandiarajan - tirupur,இந்தியா
24-ஆக-202108:36:22 IST Report Abuse
S.Pandiarajan ஒரு அரசாங்க மென் பொருளை ஒழுங்காக வடிவைமிக்க முடியவில்லை இதில் டிஜிட்டல் இந்தியா ?கேவலமா உள்ளது
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
24-ஆக-202106:55:12 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பாம் 10 பைல் செய்ய கடைசி தேதி 31/08/2021 அதை நீடிக்க சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X