பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வு எதிரொலி; தயாராகும் தியேட்டர்கள்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ஊரடங்கு தளர்வால் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தியேட்டர்களை திறப்பதற்கான ஏற்பாடு நடக்கிறது. இருக்கைகள், டிக்கெட் கவுன்டர், வளாகத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்கின்றனர். புதிதாக படம் வெளியாகாததால் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. நாளை (ஆக. 25) முதல் திறக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் தடுப்பு

ராமநாதபுரம் : ஊரடங்கு தளர்வால் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தியேட்டர்களை திறப்பதற்கான ஏற்பாடு நடக்கிறது. இருக்கைகள், டிக்கெட் கவுன்டர், வளாகத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்கின்றனர். புதிதாக படம் வெளியாகாததால் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. நாளை (ஆக. 25) முதல் திறக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறை பின்பற்றி அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.

திறக்கப்படாத தியேட்டர்கள்

காரைக்குடி: கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஏப்.24 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கு திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. திரையரங்குகளில், கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்தது. இந்நிலையில், நேற்று புதிய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு திட்டமிடப்படாததால், காரைக்குடியில் திரைப்படம் திரையிடப்படவில்லை. ரசிகர்கள்ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X