பஸ் இல்லாததால் நடந்து செல்லும் மக்கள்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : ஆதனக்குறிச்சி ஊராட்சியில் பல ஆண்டுகளாக பஸ் வசதியில்லாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட கிராம மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.முதுகுளத்துார் ஒன்றியம் ஆதனக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கிழவனேரி, ஆதனக்குறிச்சி, கண்ணன்கோட்டை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து பிற பகுதிக்கு பல

முதுகுளத்துார் : ஆதனக்குறிச்சி ஊராட்சியில் பல ஆண்டுகளாக பஸ் வசதியில்லாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட கிராம மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

முதுகுளத்துார் ஒன்றியம் ஆதனக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கிழவனேரி, ஆதனக்குறிச்சி, கண்ணன்கோட்டை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து பிற பகுதிக்கு பல ஆண்டுகளாக பஸ்வசதியில்லாததால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், மருத்துவமனை செல்வதற்கும் கூடுதல் பணம் செலவு செய்து சரக்கு வாகனத்தில் செல்கின்றனர்.

ஆதனக்குறிச்சி கிராமத்தில் பலஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள ரேஷன்கடை ஆபத்தான நிலையில் இருப்பதால் கிராமமக்கள் அச்சத்துடன் வாங்கி செல்கின்றனர்.ஊராட்சியில் சாலைகள்குண்டும் குழியுமாக இருப்பதால் சிரமப்படுகின்றனர்.நிதி இல்லாததால்வளர்ச்சி இல்லைஊராட்சி தலைவர் ராமலெட்சுமி கூறியதாவது:கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கண்ணன் கோட்டை கிராமத்தில் சாலைகள் அமைக்கப்பட்டது. கிழவனேரியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதனக்குறிச்சி கிராமத்தில் மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஊராட்சிக்குவரவேண்டிய நிதி வராததால் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஊராட்சிக்குஉட்பட்ட பகுதியில் சாலைகள் சேதமடைந்து இருப்பதால் மேம்படுத்துவதற்கு மாவட்ட அதிகாரிகள் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

பஸ் வசதி வேண்டும்

துணைதலைவர் கார்த்திக்ராஜா கூறியதாவது: ஆதனக்குறிச்சி ஊராட்சியில் பஸ் வசதியில்லாததால் ஆட்டோவிற்கு கூடுதல் பணம் செலவு செய்தோ இல்லை நடந்தோ செல்கின்றனர். கிராமத்திற்கு பஸ்இயக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கிழவனேரி கிராமத்தில் ரேஷன்கடைக்கு கட்டடம் இல்லாததால் கிராமமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆதனக்குறிச்சி கிராமத்தில் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X