சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கும் போராட்டம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் ராமநாதபுரம்கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.சங்க தலைவர் சந்தானம்தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணை பொதுச்செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட தலைவர் அய்யாத்துரை உட்பட நிர்வாகிகள் பலர் பேசினர். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கேசவதாசனுடன்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் ராமநாதபுரம்கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

சங்க தலைவர் சந்தானம்தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணை பொதுச்செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட தலைவர் அய்யாத்துரை உட்பட நிர்வாகிகள் பலர் பேசினர். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கேசவதாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளித்தனர்.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.1400 சம்பள உயர்வுக்கான அரசாணையை உடனே நிறைவேற்ற வேண்டும். சிறப்பூதியம் ரூ.200 மற்றும் கூடுதல் தொட்டி ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.250 வழங்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொட்டி சுத்தம் செய்ய மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் 429 ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள், துாய்மை காவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X