மாணவி பலாத்காரம்: மாணவருக்கு 'ஜாமின்'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கவுஹாத்தி,-சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஐ.ஐ.டி., மாணவருக்கு 'ஜாமின்' வழங்கப்பட்டுள்ளது.அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி, மார்ச் 28ல் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மறுநாள் மீட்கப்பட்ட அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மாணவர், ஏப்., 3ல் கைது

கவுஹாத்தி,-சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஐ.ஐ.டி., மாணவருக்கு 'ஜாமின்' வழங்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி, மார்ச் 28ல் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மறுநாள் மீட்கப்பட்ட அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மாணவர், ஏப்., 3ல் கைது செய்யப்பட்டார்.

மாணவரின் ஜாமின் மனுவை விசாரித்த கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் போர்த்தாகுர் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:பாலியல் பலாத்காரம் நடந்ததாக சாட்சிகள் கூறுகின்றன. இது போன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கும்போது, வழக்கின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாட்சிகளை, ஆதாரங்களை கலைப்பதற்கான சாத்தியம் இல்லை.பி.டெக்., படிக்கும் மாணவர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி என இருவரும் இளம் வயதினர். அவர்கள் இந்த நாட்டின் எதிர்கால சொத்து.குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால், நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X