கோவாவில் பிரபல நடிகை மர்மச்சாவு; சென்னை நபரிடம் விசாரிக்க முடிவு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பனாஜி-கோவாவில் ரஷ்ய நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துஉள்ளனர். கோவாவில் முதல்வர் பிரமோத் சவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடிகை அலெக்சாண்ட்ரா டிஜாவி தங்கியிருந்தார். இவர் தமிழில்,
 கோவாவில் பிரபல நடிகை மர்மச்சாவு; சென்னை நபரிடம் விசாரிக்க முடிவு

பனாஜி-கோவாவில் ரஷ்ய நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த புகைப்பட கலைஞரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துஉள்ளனர்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நடிகை அலெக்சாண்ட்ரா டிஜாவி தங்கியிருந்தார். இவர் தமிழில், காஞ்சனா - 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அலெக்சாண்ட்ரா வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படவில்லை. தகவல் அறிந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு, துாக்கில் நடிகை பிணமாக தொங்கினார். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனை நடத்த ரஷ்ய துாதரகத்தின் அனுமதியை கேட்டுள்ளனர்.போலீஸ் விசாரணையில், நடிகையுடன் அவரது ஆண் நண்பர் தங்கியிருந்தது தெரிந்தது. அவரை தற்போது காணவில்லை.

இதற்கிடையே, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ரஷ்ய துாதரக கிளையில், கோவா பிரதிநிதியாக பணியாற்றும் வழக்கறிஞர் விக்ரம் வர்மா கூறியதாவது:சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 2019ல் அலெக்சாண்ட்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த மரணத்தில் அவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். அவரிடம் கோவா போலீசார் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த அந்த புகைப்பட கலைஞரிடம் விசாரிக்க, கோவா போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X