பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவில் புகையில்லா உணவு தயாரிக்கும் போட்டி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சிவகங்கை, : சத்துணவில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு புகையில்லா உணவு தயாரிக்கும் போட்டி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.போட்டியில் 12 ஒன்றியங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். கலெக்டரின் சத்துணவு நேர்முக உதவியாளர் சாந்தி தலைமையில் நடந்தது. சிவகங்கை ஒன்றிய பி.டி.ஓ., உமாமகேஸ்வரி, சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.

சிவகங்கை, : சத்துணவில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு புகையில்லா உணவு தயாரிக்கும் போட்டி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

போட்டியில் 12 ஒன்றியங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். கலெக்டரின் சத்துணவு நேர்முக உதவியாளர் சாந்தி தலைமையில் நடந்தது. சிவகங்கை ஒன்றிய பி.டி.ஓ., உமாமகேஸ்வரி, சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். அடுப்பு எரிக்காமல்,எண்ணெய் பயன்படுத்தாமல், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவுகளாக தயாரிக்கும் வகையில் போட்டி நடந்தது.

முதல் மூன்று இடம் பெற்றவர்களை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தேர்வு செய்தார். சத்துணவு பிரிவு உதவியாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். வெற்றி பெற்ற மூவருக்கும் முதல்பரிசாக 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 1500 ரூபாய் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கவுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X