பொது செய்தி

தமிழ்நாடு

தெருப்பெயர் பலகைகள் மீண்டும் நிறுவ கோரிக்கை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் பெயர்க்கப்பட்ட தெரு பெயர் பலகைகளை மீண்டும் பொருத்த மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.திருப்புத்துார் பேரூராட்சியில் சிலஆண்டுகளுக்கு முன் தெருக்களின் பெயர்கள் இரும்பு பலகைகளில் எழுதப்பட்டு பல இடங்களில் நிறுவப்பட்டது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது பல இடங்களில் இந்த தெருப்பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.ரோடு பணிகள்

திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் பெயர்க்கப்பட்ட தெரு பெயர் பலகைகளை மீண்டும் பொருத்த மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

திருப்புத்துார் பேரூராட்சியில் சிலஆண்டுகளுக்கு முன் தெருக்களின் பெயர்கள் இரும்பு பலகைகளில் எழுதப்பட்டு பல இடங்களில் நிறுவப்பட்டது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது பல இடங்களில் இந்த தெருப்பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.ரோடு பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்த அறிவிப்பு பலகைகள் மீண்டும் பொருத்தமான இடங்களில் நிறுவப்படவில்லை.

இந்த அறிவிப்பு பலகைகள் சேதமானது. மக்களின் வரிப்பணம் வீணாவதுடன், தெருக்களின் பெயர் தெரியாமல் வெளியூர்வாசிகள் அவதிக்குள்ளாவதும் தொடர்கிறது. மேலும் பெயர் பலகை இல்லாத அனைத்து தெருக்களுக்கும் புதிதாக நிறுவவும் அப்பகுதியினர் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X