பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் பெற்ற ஆந்திர வாலிபர் சொந்த ஊர் திரும்பினார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் மனநலசிகிச்சை பெற்று வந்த ஆந்திரா வாலிபர் பூரண குணமடைந்ததும், தன் சகோதரருடன் சொந்த ஊருக்கு திரும்பினார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் புல்லாராவ் 29. இவர் மார்ச் 27 அன்று சாத்தரசன்கோட்டை பகுதியில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்தார். அவரிடம் பேசிய மக்கள் அவர் தெலுங்கில் பேசியதால் அவரிடம் விபரம் கேட்க முடியாத நிலையில் சிவகங்கை அரசு

சிவகங்கை : சிவகங்கையில் மனநலசிகிச்சை பெற்று வந்த ஆந்திரா வாலிபர் பூரண குணமடைந்ததும், தன் சகோதரருடன் சொந்த ஊருக்கு திரும்பினார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் புல்லாராவ் 29. இவர் மார்ச் 27 அன்று சாத்தரசன்கோட்டை பகுதியில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்தார். அவரிடம் பேசிய மக்கள் அவர் தெலுங்கில் பேசியதால் அவரிடம் விபரம் கேட்க முடியாத நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்தில் வாலிபருக்கு மனநல டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 5 மாத சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவரிடம் டாக்டர்கள் விபரங்களை பெற்றனர். பின்னர் ஆந்திரா போலீஸ் உதவியுடன் அவரது வீட்டிற்கு தெரிவித்தனர்.சிவகங்கை வந்த அவரது சகோதரர் சஞ்சீவ் ராவ், புல்லா ராவை ஆந்திராவிற்கு அழைத்து சென்றார். அவரை டீன் ரேவதி தலைமையிலான குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X