தமிழ்நாடு

சர்க்கரை நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மாத்திரை வழங்கும் திட்டம் எப்போது

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : சர்க்கரை நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மாத்திரை வழங்கும் திட்டத்தை சிவகங்கை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தாததால் பரிசோதனை, மாத்திரை வாங்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருந்து நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் உள்ளோர் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்து அவர்களில் 40

சிவகங்கை : சர்க்கரை நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மாத்திரை வழங்கும் திட்டத்தை சிவகங்கை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தாததால் பரிசோதனை, மாத்திரை வாங்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருந்து நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் சர்க்கரை நோயாளி, ரத்த அழுத்தம் உள்ளோர் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்து அவர்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பதிவு செய்து 60ஆயிரம் பேர் வரை மாத்திரை பெறுகின்றனர். அரசு மருத்துவமனை தவிர்த்து தனியார் சர்க்கரை நோய் மருத்துவமனை மூலம் 75 ஆயிரம் பேர் வரை மாத்திரை எடுக்கின்றனர்.

வீடு வந்து சேராத மாத்திரை

இந்நோய் உள்ளவர்களின் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து அதற்கேற்ப அவரவர் வீட்டிற்கே சென்று மாத்திரை வழங்கும் திட்டத்தை பரிட்சார்த்தமாக சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே அரசு துவக்கியுள்ளது. மற்ற 11 ஊராட்சி ஒன்றியம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் இன்னும் சென்று சேரவில்லை.வழக்கம் போல் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து டாக்டர்கள் ஆலோசனைபடி மாத்திரை எடுக்க பல மணிநேரம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மாவட்டத்தில் அனைத்து பகுதியை சேர்ந்த சர்க்கரை நோயாளிகளுக்கும் வீடு தேடி மாத்திரை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளி 5000 பேர் அவதி

சிவகங்கை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் பிரிவில் மட்டுமே 5000 சர்க்கரை நோயாளிகள் 'தொற்றா நோய் சிகிச்சை அட்டை' (என்.சி.டி., கார்டு) பெற்று சிகிச்சைக்கு வருகின்றனர். சர்க்கரையின் அளவை பொருத்து 2 மாதத்திற்கு மாத்திரை வழங்குகின்றனர். மாதந்தோறும் பரிசோதனைக்கு வர கூறுகின்றனர். இங்குள்ள தொற்றா நோய் பிரிவில் போதிய நர்சுகள், டாக்டர்கள் இல்லை.

இதனால் காலை 8:00 மணிக்கு வரும் நோயாளிகள் நர்சிடம் பெயரை சொல்லி 'என்.சி.டி., கார்டை' பெற்று டாக்டரின் ஆலோசனையை பெற மதியம் 12:00 மணி ஆகிவிடுகிறது. அதிலும் போதிய டாக்டர், நர்சு இல்லாவிடில் மதியம் 2:00 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X