மக்களுக்கு வசதிகள் செய்யாத எஸ்.மாத்தூர் ஊராட்சி; சேவை மைய கட்டடத்தில் இயங்கும் அலுவலகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு வசதிகள் செய்யாத எஸ்.மாத்தூர் ஊராட்சி; சேவை மைய கட்டடத்தில் இயங்கும் அலுவலகம்

Added : ஆக 23, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.மாத்துார் ஊராட்சியில் வீடுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது.இவ்வொன்றியத்தின் பெரிய ஊராட்சிகளில் ஒன்றானதும், ஏழு உட்கடை கிராமங்களை உள்ளடக்கியதுமான இங்கு, வீதியில் ஓடும் கழிவுநீரும், கான்கிரீட் பெயர்ந்த தண்ணீர் தொட்டியும், கரடுமுரடான சாலைகளுமே மாறா அடையாளங்களாக உள்ளன.2 ஆயிரம் பேர் வசிக்கும்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.மாத்துார் ஊராட்சியில் வீடுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது.

இவ்வொன்றியத்தின் பெரிய ஊராட்சிகளில் ஒன்றானதும், ஏழு உட்கடை கிராமங்களை உள்ளடக்கியதுமான இங்கு, வீதியில் ஓடும் கழிவுநீரும், கான்கிரீட் பெயர்ந்த தண்ணீர் தொட்டியும், கரடுமுரடான சாலைகளுமே மாறா அடையாளங்களாக உள்ளன.2 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சிப்பணிகள் குறைவாகவே நடக்கிறது.

அடிப்படை வசதிகளை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் பல வழிகளிலும் முயற்சித்தும் முழுப்பலன் கிடைக்கவில்லை. வரிவருவாயும் இதர வருமானமும் குறைவாக இருப்பதால் இங்கு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே நிதி போதவில்லை .உச்சக்கட்டமாக ஊராட்சி கட்டடமே பாழடைந்து கிடப்பதால் பக்கத்திலுள்ள சேவை மைய கட்டடத்தில் தான் அலுவலகமே இயங்குகிறது.

ஊராட்சிக்குட்பட்ட ஊதம்பட்டி செல்லும் தார்சாலை வருடக்கணக்கில் படுமோசமாக உள்ளது. இவ்வழியாக அமைச்சர்கள், அதிகாரிகளின் வாகனங்கள் ஒரு முறை வந்து சென்றால் கூட, சாலை தானாக சீராகிவிடும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆனால் யாரும் வந்த பாடில்லை.

அதிகாரிகள் கவனிக்காததால் ஊராட்சியில் சீரமைக்கப்படாத சாலைகளும், சில மாதங்களிலேயே சின்னாபின்னமாகிப் போன சாலைகளும் ஏராளம். பாதியில் விடப்பட்ட பணிகளும் உண்டு.கிராமங்களுக்கு நிதி தேவைஹேமலதா, தலைவர்: பெரிய ஊராட்சியாக இருந்தாலும் நிதிநிலையும், வருவாயும் குறைவாக இருப்பதால் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இருந்தாலும் முடிந்தவரை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறோம்.

இப்பகுதியில் குறைந்தழுத்த மின்சார பாதிப்பைத் தவிர்க்க டிரான்ஸ்பார்மர் அவசியம் தேவை. திருமண மண்டபம், தனி ரேஷன் கடை எங்களின் நீண்டநாள் கோரிக்கை. மக்கள் தொகை, உட்கடை கிராமங்களை கணக்கில் கொண்டு ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

அமைச்சர் மனது வைப்பாரா

எஸ்.மனோகரன், துணைத் தலைவர்: ஊராட்சியின் முக்கிய தேவை குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே மனுக்கள் அனுப்பியுள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. சில பணிகளை செய்து தருவதாக அமைச்சர் பெரியகருப்பன் உறுதியளித்துள்ளார். வணங்காமுடிபட்டியில் கதிரடிக்கும் களம், பேவர் பிளாக் அமைத்து சிமென்ட் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X