அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோடநாடு விவகாரம் பற்றி சபையில் விவாதிக்க கூடாது'

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (17+ 16)
Share
Advertisement
சென்னை : ''நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, சட்டசபையில் விவாதிக்கக் கூடாது என்று விதி உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.ஜெயகுமார் அளித்த பேட்டி:சட்டசபை விதி 55ன் கீழ், கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டசபையில் எழுப்ப உள்ளதாக, காங்கிரசை சேர்ந்த செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டசபையில் விவாதிக்க, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள்
'கோடநாடு விவகாரம் , சபை விவாதிக்க கூடாது'

சென்னை : ''நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, சட்டசபையில் விவாதிக்கக் கூடாது என்று விதி உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஜெயகுமார் அளித்த பேட்டி:

சட்டசபை விதி 55ன் கீழ், கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டசபையில் எழுப்ப உள்ளதாக, காங்கிரசை சேர்ந்த செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டசபையில் விவாதிக்க, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, எந்த காலத்திலும் விவாதித்தது கிடையாது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் சூழலில், சட்டசபையில் பேச வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை. அ.தி.மு.க.,விற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே தி.மு.க., அரசின் நோக்கமாக உள்ளது.விழுப்புரத்தில், தி.மு.க., கொடி நட்ட 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளான். இதற்காக, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது, குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திய சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இன்பதுரை கூறுகையில், ''தமிழக சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளார்.

''அவர் தன் வேட்பு மனுவில், அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ''ஒரு வழக்கு சி.பி.ஐ., வழக்கு. இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்கலாம் என்று கூறினால் ஏற்பாரா?'' என கேள்வி எழுப்பினார்.


நாவலை விட மர்மம்!சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம், ராஜேஷ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது. ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தால், தேவை இல்லாததை பேசுகின்றனர். எதற்கு இந்த அச்சம்; பயமில்லை என்றால் நாங்கள் சந்திக்க தயார் என கூறலாமே?
ஜெ., ஆன்மா இருக்குமானால் உண்மை வெளிவரும். சட்டசபையில் விவாதிக்க தயாராக இல்லை என்றால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க அழைக்கிறோம். ஜெயலலிதாவுக்கு இந்த ஆட்சி நீதி வழங்கும். சரியான பாதையில் விசாரணை செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
24-ஆக-202114:25:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இப்போ நடக்குற கொடநாடு விசாரணை எதற்கு ?? அது முன்னாள் முதல்வர் ஜெயாவின் வீடு அதனால் 1 )கொடநாட்டில் யார் கொள்ளை அடிக்க சொன்னது ?? 2 ) யாரெல்லாம் போய் கொள்ளை அடித்தார்கள் ?? 3 ) கொள்ளை அடிக்க உதவிய முக்கிய அரசியல் புள்ளிகள் / கொடநாடு ரகசியம் தெரிந்தவர்கள் 4) கொள்ளை அடித்த கொள்ளை பணம் + வைரங்கள் + முக்கிய டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இப்போஎங்கே உள்ளது இவைகளுக்கு பதில் காணத்தான் விசாரணை நடக்குது இதைத்தான் பொது மக்களும் எதிர் பார்க்கிறார்கள் ?? ஆனால் இந்த விவகாரத்தை தான் தவறு செய்யாத பட்சத்தில் ஏன் EPS மூர்க்கமாய் எதிர்க்கிறார் என தெரியவில்லை ?குற்றவாளியை கண்டுபிடிக்க ஒரு முறை அல்ல நூறு முறைகூட விசாரணை நடத்தலாம் இதில் இவரை பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு எங்கு வந்தது ??இவர் ஏன் பயப்படுகிறார் ?? அப்படியெனில் மேற்கூறிய 4 காரணங்களில் EPS நேரடி சம்பந்தம் உள்ளதா ?? அப்படி இவர் சம்பந்தம் இல்லையெனில் யாரை காப்பாத்த கூப்பாடு போடுகிறார் ??
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஆக-202113:45:39 IST Report Abuse
Pugazh V எடப்பாடி தான் இந்த பிரச்சனையை சட்டசபையில் ஆரம்பித்து வைத்தார். திருத்தப்பட்ட பட்ஜெட் விவாதம் முடிந்த பிறகு பேசலாம் என்று சொல்லியும் கேட்காமல் வெளியே போனார். ரெண்டு நாள் மட்டம் போட்டார். இவர் தொடங்கி வைத்த பேச்சுக்கு பதில்கள் வரத் துவங்கியதும் இதைப் பற்றி பேசக்கூடாது என்று இவரது அடிப்பொடிகளை விட்டு சொல்லச் சொல்கிறார். பிரதமரிடம் முன்னாலயே ஓடினார். பிறகு கவர்னரிடம் ஓடுகிறார். இபிஎஸ் தான் ஆரம்பித்து வைத்தார்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-202113:03:27 IST Report Abuse
Kasimani Baskaran இரண்டு பிரதான கழகங்களும் புறவாசல் உறவில் வாழ்பவை (உ: சாராய வியாபாரம், தொகுதி ஒதுக்கீட்டில் ஒத்துழைப்பு). அந்த புறவாசல் உறவை ஒருவரால் துண்டிக்க முடியும் என்றால் - இவர்களின் கதை கத்தலாகிவிடும்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-ஆக-202115:08:30 IST Report Abuse
Dhurveshஇந்த வழக்குதொடர்பான மர்மங்களை விலக்க அரசு முயல்வது பழிவாங்கும் நடவடிக்கையா? அரசோ, ஆளும் கட்சியோ எந்த ஒரு குறிப்பிட்ட நபர்/அமைச்சர் மீது விசாரணை மேற்கொள்வதாகவா சொல்லியிருக்கிறது? தனிப்பட்ட ஒரு நபர் அச்சப்பட்டு ஆளுநரைச் சந்தித்து மனு கொடுக்கும் விடயம் சட்டமன்றத்தில் விவாதப் பொருளாகாதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X